search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயல்களில் சூழ்ந்த ஆகாய தாமரை செடிகளால் விவசாய பணிகள் பாதிப்பு
    X

    ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள்.

    வயல்களில் சூழ்ந்த ஆகாய தாமரை செடிகளால் விவசாய பணிகள் பாதிப்பு

    • நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் வேகமாக பரவி வருகின்றன.
    • ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் அழிக்க முடியவில்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை துவங்கியுள்ள நிலையில் சாலியமங்களம் பகுதியில் சம்பா சாகுபடி வயல்கள் மற்றும் நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் காணப்படுகிறது.

    பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரில் மிதந்து வந்து வயல்களில் ஊடுறுவி தற்போது வயல்கள் முழுவ தும் வேகமாக பரவிவரும் இந்த பிரச்சனையால் சம்பா சாகுபடி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வயல்களில் ஓரீரு இடத்தில் காணப்பட்ட ஆகாய தாமரை செடிகள் தற்போது வேகமாக வயல் முழுவதும் பரவி வருவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    விவசாய வயல்களில் வேகமாக படர்ந்து வரும் இந்த ஆகாய தாமரை செடிகளை ஒழிக்க விவசாயிகள் பல்வேறு யுத்திகளை கையாண்டும், களை கொல்லி மருந்துகளை தெளித்தும், கட்டுபடுத்த முடியவில்லை அதனால் விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர்.

    நடவு வயல்களில் வேகமாக பரவி வரும் ஆகாய தாமரை செடிகளை அழிக்கவும், சம்பா பயிர்களை காப்பாற்றவும், அரசு வேளாண் அலுவலர்களை கொண்ட குழுவை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வயல்களில் பரவிவரும் ஆகாயதாமரை செடிகளை கட்டுப்படுத்த விவசாயி களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமென எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது, ஆகாயதாமரை செடிகள் பாசன வாய்க்கால் மூலம் வயல்களில் ஊடுருவி தற்போது வயல்களில் அதி வேகமாக பரவி வருகிறது ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் ஆகாய தாமரை செடிகளை அழிக்க முடியல மாறாக நடவுபயிர்கள் வளர்ச்சி தான் பாதிக்கிறது இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றனர்.

    Next Story
    ×