என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடம்.
  X
  புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடம்.

  புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதியம்புத்தூர் அருகே புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  புதியம்புத்தூர்:

  புதியம்புத்தூர்-தட்டப்பறை ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் இந்த வளாகத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் தொடக்க கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. தற்போது சங்க கட்டிட பணி முடிந்து 6 மாதம் ஆகியும் வங்கி கட்டிடம் திறக்கப்படவில்லை. 

  குடோனில் வங்கி செயல்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் வைக்க இடமில்லாமல் உரங்களை வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்க வேண்டியது உள்ளது. 

  விவசாயிகள் இந்த குடோனில் விவசாய பொருட்களை வைக்க முடிவதில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  Next Story
  ×