என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகில் பாம்பு, விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறி இருக்கும் பாழடைந்த கட்டிடம்
- ஆலங்குடி போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடம் பாம்பு, விஷ ஜந்துக்கள் புகலிடமாக இருக்கின்றது
- கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், போலீசார் குடியிருப்பும் உள்ளது. இதன் அருகே வருவாய்த்துறையினர் குடியிருந்த ஓட்டு கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் குடியிருப்பதற்கு தகுதியற்ற கட்டிடம் என்று காலி செய்து சுமார் 25 வருடங்களாக யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இதனை யாரும் பயன்படுத்தாத நிலையில், அங்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குடும்பத்தினரும் அவர்களது குழந்தைகளும் கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எந்தவித பயன்பாடும் இல்லாத இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பே உடனடியாக இந்தப் பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்பது இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.






