search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book fair"

    • தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர்.
    • அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் இன்று இரவு நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை பொருநை புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, ெதாடர் வாசிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது.

    கைதிகளுக்கு புத்தகம்

    தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர். பெரும்பாலானோர் அங்குள்ள புத்தகங்களை வாங்கி சிறை கைதிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

    கண்காட்சி தொடங்கி 9-வது நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என ஏராள மானோர் திரண்டனர்.

    பட்டிமன்றம்

    ஒரு நாள் ஒரு புத்தகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் புத்தகங்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்கள் தயார் செய்த புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது.

    இன்று இரவு, வாழ்க்கை யில் நிம்மதியை தருவது அன்பா? அறிவா? என்ற தலைப்பில் அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடக்கிறது.

    நாளை மறுநாள் நிறைவு

    அரசு அருங்காட்சியகம் சார்பில் கூட்டு ஓவியப்ப யிற்சி இன்று நடத்தப்பட்டது. நாளை மறுநாள் 7-ந் தேதியுடன் புத்தக கண்காட்சி நிறை வடைகிறது. இதனால் பார்வையாளர்களின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி,கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என இதுவரை லட்சக்கணக்கானோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    • தினமும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு செல்கிறார்கள்.
    • 7-ந்தேதி வரை தினமும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை பொருநை புத்தக கண்காட்சி பாளை வ.உ.சி. மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாணவிகளுக்கு பயிற்சி

    தினமும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு செல்கிறார்கள்.

    மேலும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 7-ம் நாளான இன்று நெல்லை அரசு அருங்காட்சி யகம் சார்பில் வாழை நாரில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப் பட்டது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    தொடர் வாசிப்பு

    தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் தொடர் வாசிப்பு நிகழ்ச்சியிலும் இன்று கல்லூரி மாணவர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர். மாற்றுத்திற னாளிகளுக்கு சிறப்பு வாசிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    இன்று மாலை, சூடாமணி என்ற மாணவி எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடை பெறுகிறது.

    கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 7-ந்தேதி வரை தினமும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த புத்தகம் வெளியிடப்படுகிறது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை யாற்றுகிறார்.

    நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

    • 20000 க்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய அரங்குகள் அமைக் கப்பட்டு இருந்தது.
    • முதல்வர் பிரமோதனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் கதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல், பொதுஅறிவு, கலைக்களஞ்சியம், அகராதிகள், வாழ்க்கை வரலாறு, கணிதம், கணினிஅறிவியல், போட்டி தேர்வுகளுக்கு என பல்வேறு தலைப்புகளில் 20000 க்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை பெற்றோருடன் வந்து வாங்கி சென்றனர்.

    முன்னதாக ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி கண்காட்சியினை தொடங்கிவைத்து மாணவர்களிடையே புத்தகங்களுக்கு செய்யும் செலவினம், எதிர்கால வாழ்க்கைக்கான முதலீடு என்னும் கருத்தை வலியுறுத்திபேசினார்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் பிரமோதனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தனியார் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் 

    திருப்பூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என்று இந்து இளைஞா் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து இளைஞா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரில் தனியார் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே தற்போது நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் பணி செய்ய அரசுப் பள்ளி ஆசிரியா்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கண்டனத்துக்குரியது என்று தேசிய ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய போக்கை நிறுத்தாவிட்டால் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ஜனவரி 11-ந்தேதி வரை நடைபெறும்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் 25-வது தேசிய உருது புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தேசிய உருதுமொழி ஆணையத்தின் இயக்குனர் ஷேக் அகில் அஹமத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ, கே.ஹெச். குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மலக் முஹம்மத் ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-

    10 முதல் 12 நாடுகளில் உருது பேசும் மக்கள் உள்ளன. 23 கோடி பேர் உருது பேசுகின்றனர். 7100 மொழிகள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அதில் உலகத்தில் உருது பத்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் 8 மாநிலங்களில் உருது 2-வது மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் முதல் மொழியாக உருது உள்ளது. இந்தியாவில் 22 மொழிகளில் அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. அதில் உருது மொழியும் ஒன்று.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கண்காட்சி ஜனவரி 11-ந்தேதி வரை நடைபெறும். வரும் 7-ந் தேதி பெண்கள் மட்டும் இக்கண்காட்சியில் கலந்துக் கொள்வார்கள்.

    கண்காட்சி நடைபெறும் நாட்களில் பேச்சுபோட்டி, கவியரங்கம், புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, உருது நாடக நிகழ்ச்சி, கவிதை போட்டி, அறிவியல் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கண்காட்சியில் 55 சிறந்த உருது புத்தக பதிப்பாளர்கள் தங்களது புத்தங்களை விற்பனைக்காக காட்சிப்ப டுத்தவுள்ளனர்.

    95 புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமய நூல்கள் உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
    • 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளன.

    இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    வாசர்களின் திருவிழாவில் இந்தாண்டு திருநங்கைகள் / பால்புதுமையினர் இலக்கியங்கள் இடம்பெற உள்ளதாக பா.ப.சி.-யின் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்துள்ளார்.

    • புத்தக கண்காட்சியை நடத்தும் பதிப்பகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தது.
    • புத்தக கண்காட்சியை அரசு பள்ளியில் நடப்பதை தடை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சியை நடத்தும் ஒரு பதிப்பகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தது. இப்பதிப்பகம் நடத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகம் துணை போவது ஏற்புடையதாக இல்லை.

    பள்ளி வளாகத்திற்குள் வியாபார நோக்கத்துடன், பொருள் விற்பனை செய்வது சட்ட விரோதம். இது, மாணவர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் மைதானம் இப்புத்தக கண்காட்சியால் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். இதனை கருத்தில் கொண்டு, புத்தக கண்காட்சியை அரசு பள்ளியில் நடப்பதை தடை செய்ய வேண்டும். இல்லாவிடில் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

     

    • அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.
    • அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தை அம்பாசமுத்திரம் வட்டார சாமில் மற்றும் மரவியாபாரிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் தொடங்கி வைத்தார். மூட்டா தலைவர் பேராசிரியர் இசக்கி, புரட்சிகர இளைஞர் முன்னணி மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த.மு.எ.க.ச. செயலர் வேல்முருகன் வரவேற்றார். மனிதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதி மன்றம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தொலைக்காட்சி மற்றும் செல்போன் காரணமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் நூலகத்தில் படிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் நூலகத்தில் இடம் இல்லாமல் நூலகத்துக்கு வெளியே அமர்ந்தபடியும் பலர் புத்தகம் வாசித்தனர். இப்போது அந்த பழக்கம் குறைந்து விட்டது.

    புத்தகம் வாசிப்பவர்களுக்கு மன அழுத்தம் வராது. தீய பழக்கத்தை நாடி மனம் செல்லாது. நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல ஒழுக்கம், நல்ல சிந்தனை, நல்ல நடத்தை வளரும். புத்தகம் படிப்பது மட்டுமே மனிதனை வாழ வைக்கும்.

    அறிவு உலகத்தை புத்தகம் வழியாகத்தான் காண முடியும். தொடர்ந்து புத்தகம் வாசிக்கும்போது நினைவாற்றல் பெருகும் என்பதால் மாணவர்கள் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த புத்தக திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் நாளிலேயே இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

    இந்த புத்தக திருவிழா வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக கண்காட்சி திறந்திருக்கும். தினமும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    சிந்தனையை தூண்டும் சிறப்பு பேச்சாளர்கள் காளீஸ்வரன், ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்த், இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    புத்தக கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். இதில் செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாலாஜி, வரலட்சுமி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்த இருக்கிறது.
    • புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் 4.01.2023 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திருவிழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து இதனை நடத்த இருக்கிறது.

    புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் 4.01.2023 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. புத்தக அரங்குகள், கலை அரங்கம், உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்து கொண்டு சிறப்பாக இருக்கின்ற சிந்தனை அரங்கம் ஆகியவற்றுடன் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு புத்தகத்திருவிழாவில் கோளரங்கம், புத்தக வெளியீடுகள், மாணவ மாணவியருக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை சிறப்பம்சங்களாகும்.

    சிந்தனையை தூண்டும் சிறப்புப் பேச்சாளர்களாக காளீஸ்வரன், ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்தா, இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் செவிக்கு விருந்தளிக்க இசைந்துள்ளார். செங்கை புத்தகத் திருவிழாவில் 'செஸ்' புகழ் தம்பியின் சின்னம் வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • புதுவை எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26-வது தேசிய புத்தக கண்காட்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தொடங்கியது.
    • வருகிற 25-ந் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26-வது தேசிய புத்தக கண்காட்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தொடங்கியது. வருகிற 25-ந் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்காட்சியை தொடங்கி வைத்து புதிய நூல்களை வெளியிட்டார்.

    பாஞ்.ராமலிங்கம் நோக்க உரையாற்றினார். எழுத்தாளர்கள் புத்தக சங்க தலைவர் முத்து வரவேற்று பேசினார். வேல்.சொ.இசைக்கலைவன் முன்னிலை வகித்தார். கோதண்டபாணி நன்றி கூறினார்.

    இக்கண்காட்சியில் இந்த ஆண்டிற்கான புத்த சேவா ரத்னா விருது புதுவை கூட்டுறவு புத்தக சங்கம் மற்றும் புதுவை தமிழ் சங்கத்தின் துணை தலைவர் ஆதிகேசவன், மோரீசியஸ் முருகன் பவுன்டேசன் தலைவர் தேவராஜன் பொன்னம்பலம், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஜோதி, புதுவை பல்கலை க்கழக நூலகர் விஜயகுமார், சமூக ஆர்வலர் சடகோ ப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முடிவில் கோதண்டபாணி நன்றி கூறினர்.

    கடந்த ஆண்டு 1 1/2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் ரூ.50 லட்சம் அலவிற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கு அதிகமான புத்தகங்கள் ரூ.75 லட்சம் அளவிற்கு விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×