search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக கண்காட்சி"

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    திருவள்ளூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் புத்தக கண்காட்சி நடை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

    இந்த கண்காட்சி மார்ச் 4-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்கட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கின்றன.


    இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் தினமும் சிந்தனையை தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

    மேலும் புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    • 33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
    • ஆர்வம் காட்டும் மாநிலங்கள்-பீகார், அரியானா, அந்தமான்-நிகோபார் தீவுகள், நாகாலாந்து.

    புதுடெல்லி:

    புத்தாக்க நிறுவனங்களுக்கு (வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.

    மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (டி.பி.ஐ.ஐ.டி.) துறை இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்பட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மிகச் சிறநத மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.

    33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன.

    மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கர்நாடகா 2-வது ஆண்டாகவும் இடம் பிடித்து உள்ளன.


    2022-ம் ஆண்டுக்கான இந்த தர வரிசைப் பட்டியலை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

    மிக சிறந்த மாநிலங்கள்-குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்.

    சிறந்த மாநிலங்கள்-மகாராஷ்டிரா , ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா.

    முதன்மை மாநிலங்கள்-ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா.

    ஆர்வம் காட்டும் மாநிலங்கள்-பீகார், அரியானா, அந்தமான்-நிகோபார் தீவுகள், நாகாலாந்து.

    முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்-சத்தீஸ்கர், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம்.

    • சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
    • 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    "40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

    தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்" என தெரிவித்துள்ளார்.

    • சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.
    • முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் 'முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி' விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.

    மேலும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.

    திமுக இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள

    முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கினார்.
    • தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று முதல் தொடங்கியது.

    புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 47-வது புத்தகக் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றி வருகிறார்.

    தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் வரும் ஜனவரி 21ம் தேதிவரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடந்தது

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணையக் குழு சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நாளான இன்று நூலக வார விழா மற்றும் புத்தக கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட நூலக அலுவலரிடம் புத்தக விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

    சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உள்ள மாணவர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் பழனி, மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலக கண்கா ணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனை

    மைசூரு தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை 5 லட்சம் பேர் வரை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த ஆண்டு 15-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை தசரா மலர் கண்காட்சி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று தசரா மலர் கண்காட்சி மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்படுத்தி உள்ளது. இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் 6 லட்சம் வெள்ளை, சிகப்பு ரோஜா பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

     விநாயகர் சிலை

    துர்கா தேவி சிலை, விநாயகர் சிலை, இந்தியா மற்றும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், அரசு பஸ் ஜீப், அரசியலமைப்பு சாசன புத்தகம் பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண மலர்களால் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி வடிவமைப்புக்காக 30 தனியார் தொழிற்சாலைகள், 41 தனியார் விடுதிகள், 13 அரசு அலுவலகங்கள், 22 கல்வி மையங்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    5 நாட்களுக்கு ஒரு முறை பூக்கள் மாற்றப்படுகிறது. மழை பெய்தால் மாற்ற வேண்டிய தேவை இல்லை. வெயில் அடித்தால் மட்டுமே மாற்ற 5 நாட்களுக்கு ஒரு முறை பூக்களை மாற்ற வேண்டும். தசரா மலர் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

     மல்யுத்த போட்டி

    இதேபோல், தசரா கண்காட்சி அருகே உள்ள மைதானத்தில் நேற்று மல்யுத்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்கவுட் அண்ட் கைட் மைதானத்தில் உணவு மேளா தொடங்கியது. இதனை மந்திரி கே.எச்.முனியப்பா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    புத்தக கண்காட்சி

    மைசூரு பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மைசூரு தசரா கண்காட்சியை மந்திரி சிவராஜ் தங்கடகி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 90 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

    தசரா மின்விளக்கு அலங்காரம், ஜம்பு சவாரி ஊர்வலம் செல்லும் ராஜபாதை சயாஜி ராவ்ரோடு பச்சை (கிரீன்) மண்டபத்தில் மந்திரி கே.ஜே. ஜார்ஜ் தொடங்கி வைத்தார். மின்விளக்கு அலங்காரத்ைத பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

     மின்விளக்கு அலங்காரம்

    மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனைக்கு மத்தியில் தசரா கலாசார நிகழ்ச்சியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அவர் சிறந்த சங்கீத வித்வான்களுக்கு கர்நாடக அரசின் சங்கீத வித்வான் விருது வழங்கி பாராட்டினார். பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நடைபெற்றது. தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருவதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • மதுரையில் வருகிற 12-ந்தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி 10 நாட்கள் நடக்கிறது.
    • சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.

    இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பா ளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த கண் காட்சியை நடத்துகின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இந்த ஆண்டு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகள், பதிப்பகங்கள், எழுத்தா ளர்களின் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

    கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாலையில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இந்த புத்தக கண்காட்சி நடத்தப் படுகிறது. வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். சிறப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்கு வதற்கு புத்தகங்கள் வழி காட்டியாக அமையும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான, பிடித்தமான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர் களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துரைக்கப்பட்டது.

    சிவகிரி:

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வரும் நிலையில் சிவகிரி விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகிரி கிளை சார்பாக மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு நூல்கள், ஓவியம் சார்ந்த நூல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    பள்ளியின் முதல்வர் முருகேசன் தொடக்க உரையாற்றி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். துணை முதல்வர் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட இணை செயலாளர் விண்ணரசு மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மை கள் மற்றும் அதன் பயன்களை எடுத்துரைத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலு வலர்கள், மாண வர்கள், பெற்றோர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் வருகிற 14-ந் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
    • கண்காட்சியின் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 6-வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    மேலும், தஞ்சை புத்தகத் திருவிழா-2023 இலச்சினை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தஞ்சை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வடிவமைத்து ஒரு எம்.பி. அளவில் ஜே.பி.ஜி. படமாக https://thanjavur.nic.in/thanjavurbookfestival என்ற இணையதளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் நாளை ( வெள்ளி கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்ப டுத்த முடியும். இதேபோல, புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்து டன் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தியது.
    • இந்த கண்காட்சி மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட நூலக ஆணைக் குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து 38-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தியது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவி, செல்வி ராம்கிளினிக் டாக்டர் கணேசன் முதல் புத்தக விற்பனையை பெற்றுக்கொண்டனர்.

    பள்ளியின் தலைவர் எம்.ஓ.சாகுல் ஹமீது, பொருளாளர் காதர் மைதீன், துணைத் தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், ராஜாமுகமது, ராஜா முகமது, பிலால் முகமது, ஜபார், சாகுல்ஹமீது, மேலூர் வருவாய் ஆய்வாளர் முனியசாமி, அரசு கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் பெரியவர், 2-ம் நிலை நூலகர் சீதாலட்சுமி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் மகேந்திரன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

    • நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
    • 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் குமரி மாவட்டத்தின் 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறைவாசி களுக்காக புத்தகம் தானம் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இதையொட்டி புத்தக கண்காட்சியில் தானம் பெற பெட்டிகள் வைக் கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் புத்தகங்களை வழங்கி தானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பாளை யங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட கிளை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜமாணிக்கம் மற்றும் சிறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் குமரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் தானம் செய்கிறார்கள்.

    ×