search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25-வது தேசிய உருது புத்தக கண்காட்சி
    X

    புத்தக கண்காட்சியை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    25-வது தேசிய உருது புத்தக கண்காட்சி

    • வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ஜனவரி 11-ந்தேதி வரை நடைபெறும்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் 25-வது தேசிய உருது புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தேசிய உருதுமொழி ஆணையத்தின் இயக்குனர் ஷேக் அகில் அஹமத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ, கே.ஹெச். குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மலக் முஹம்மத் ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-

    10 முதல் 12 நாடுகளில் உருது பேசும் மக்கள் உள்ளன. 23 கோடி பேர் உருது பேசுகின்றனர். 7100 மொழிகள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அதில் உலகத்தில் உருது பத்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் 8 மாநிலங்களில் உருது 2-வது மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் முதல் மொழியாக உருது உள்ளது. இந்தியாவில் 22 மொழிகளில் அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. அதில் உருது மொழியும் ஒன்று.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கண்காட்சி ஜனவரி 11-ந்தேதி வரை நடைபெறும். வரும் 7-ந் தேதி பெண்கள் மட்டும் இக்கண்காட்சியில் கலந்துக் கொள்வார்கள்.

    கண்காட்சி நடைபெறும் நாட்களில் பேச்சுபோட்டி, கவியரங்கம், புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, உருது நாடக நிகழ்ச்சி, கவிதை போட்டி, அறிவியல் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கண்காட்சியில் 55 சிறந்த உருது புத்தக பதிப்பாளர்கள் தங்களது புத்தங்களை விற்பனைக்காக காட்சிப்ப டுத்தவுள்ளனர்.

    95 புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமய நூல்கள் உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×