search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5-வது புத்தக கண்காட்சி தொடக்கம்
    X

    புத்தக கண்காட்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அருகில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.

    5-வது புத்தக கண்காட்சி தொடக்கம்

    • ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×