என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Handi crafts"
- தினமும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு செல்கிறார்கள்.
- 7-ந்தேதி வரை தினமும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை பொருநை புத்தக கண்காட்சி பாளை வ.உ.சி. மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மாணவிகளுக்கு பயிற்சி
தினமும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு செல்கிறார்கள்.
மேலும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 7-ம் நாளான இன்று நெல்லை அரசு அருங்காட்சி யகம் சார்பில் வாழை நாரில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப் பட்டது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர் வாசிப்பு
தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் தொடர் வாசிப்பு நிகழ்ச்சியிலும் இன்று கல்லூரி மாணவர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர். மாற்றுத்திற னாளிகளுக்கு சிறப்பு வாசிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இன்று மாலை, சூடாமணி என்ற மாணவி எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடை பெறுகிறது.
கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 7-ந்தேதி வரை தினமும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த புத்தகம் வெளியிடப்படுகிறது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை யாற்றுகிறார்.
நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.