என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

அரசு அருங்காட்சியகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கூட்டு ஓவிய பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
விடுமுறை தினத்தையொட்டி புத்தக கண்காட்சியில் திரண்ட பொதுமக்கள்- நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது

- தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர்.
- அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் இன்று இரவு நடக்கிறது.
நெல்லை:
நெல்லை பொருநை புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, ெதாடர் வாசிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது.
கைதிகளுக்கு புத்தகம்
தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர். பெரும்பாலானோர் அங்குள்ள புத்தகங்களை வாங்கி சிறை கைதிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
கண்காட்சி தொடங்கி 9-வது நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என ஏராள மானோர் திரண்டனர்.
பட்டிமன்றம்
ஒரு நாள் ஒரு புத்தகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் புத்தகங்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்கள் தயார் செய்த புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது.
இன்று இரவு, வாழ்க்கை யில் நிம்மதியை தருவது அன்பா? அறிவா? என்ற தலைப்பில் அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடக்கிறது.
நாளை மறுநாள் நிறைவு
அரசு அருங்காட்சியகம் சார்பில் கூட்டு ஓவியப்ப யிற்சி இன்று நடத்தப்பட்டது. நாளை மறுநாள் 7-ந் தேதியுடன் புத்தக கண்காட்சி நிறை வடைகிறது. இதனால் பார்வையாளர்களின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி,கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என இதுவரை லட்சக்கணக்கானோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.