search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body"

    • முந்திரி காட்டில் தூக்கிட்ட நிலையில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
    • கொலையா போலீஸ் விசாரணை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முந்திரிக்காட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் கந்தர்வகோட்டை போலீசிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி சப்இஸ்பெக்டர் முத்துகுமர் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் கொத்தம்பட்டியில் உள்ள தனியார் கோழிபண்ணைக்கு புதிதாக செட் அமைக்கும் பணிக்கு வந்த, கரூர் மாவட்டம குளித்தலை பகுதியை சேர்ந்த பொன்னர் மகன் முருகாந்தம் (வயது 35) என்பது ெதரிய வந்தது. பணி ெசய்வதற்காக வந்த இவர் எதற்காக முந்திரி காட்டில் எதற்காக தூக்கிட்டு கொண்டார். யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லோடு ஆட்டோவில் எடுத்து சென்று பட்டம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே புதைத்தது தெரியவந்தது.
    • புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்டு கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 35), இவரது மனைவி திவ்யா (27), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    பாரதி, சென்னையில் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் பாரதி திடீரென மாயமானார்.

    இதைத் தொடர்ந்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீசார், பாரதியை தேடினர்.

    தொடர்ந்து விசாரணை யில், போலீசாருக்கு பாரதி மனைவி மீது சந்தேகம் ஏற்பட, அவருடைய மொபைல் எண்ணை பரிசோதனை செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில், திவ்யா தனது கள்ளக்காதலனுடம் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. விசாரணையில், திவ்யாவுக்கும், கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கள்ளக்காதல் விவகாரம் தனது கணவருக்கு தெரிந்த நிலையில், இடையூராக இருப்பார் என்பதால், அவரை தனது கள்ளக்கா தலுனுடன் சேர்ந்து கொலை செய்ய திவ்யா திட்டமிட்டுள்ளார்.

    தனது கணவரை கட்டையால் தலையில் அடித்து, கயிற்றால் கழுத்தை நெறித்து கள்ளகாதலுடன் சேர்ந்து கொலை செய்துள்ள னர். பின்னர், பாரதியின் உடலை, மூட்டை யாக கட்டி, சதீஷ்குமார், திவ்யா இருவரும், லோடு ஆட்டோ வில் எடுத்து சென்று, திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் உள்ள பாலத்தில் அருகே புதைத்து தெரியவந்தது.

    இதையடுத்து பந்தநல்லுார் போலீசார், திவ்யா, சதீஸ்குமார் இருவரையும் கைது செய்தனர்.

    அத்துடன் லோடு ஆட்டோ டிரைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டம் குறுக்கு சாலையில் நான்கு வழிப்பாதையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்ற போது சாலை மேம்பாலம் தூண்கள் மேல் பகுதி இணைப்பு பணிகள் நடந்த போது தான் அந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட பாரதி புதைக்க ப்பட்டிருப்பது தெரியவந்தது.

    ஆனால் ஒரு மாதம் முன்பு புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்ட் கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.

    பாரதி புதைக்கப்பட்ட இடத்தினை திருவிடை மருதூர் தாசில்தார் சுசீலா டிஎஸ்பி ஜாபர் சித்திக் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணி நடந்தது.

    சாலையை சுமார் ஏழு அடி பள்ளம் தோன்றிய நிலையில் சாக்கு மூட்டையில் பாரதி உடலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

    பாரதியின் முகம் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக் கொண்டு மூடியதோடு எட்டு சாக்குகள் கொண்டும் அவரது உடலை கட்டி புதைத்து ள்ளனர்.

    தங்கள் வீட்டில் பூஜை செய்த பொருளை புதைக்க வேண்டும் என்று கூறி லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து சாலை பணியில் ஈடுபட்டிருந்த சில வட மாநில பணியா ளர்களின் உதவி யோடு சதீஷ்குமார் உடலை புதைத்துள்ளது போலீசாரை திகைக்க செய்துள்ளது.

    சாலையை தோண்டி மீட்கப்பட்ட பாரதி உடலை டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    இச்சம்பவத்தில் சாலை பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்ளின் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கேனும் தொடர் உள்ளதா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.
    • ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    மிசோரி:

    உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது.

    அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.

    முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்தனர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதனை அந்த நகர மக்கள் இது மிசோரியின் ஒரு அதிசயம் என தெரிவித்து உள்ளனர்.

    அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • மருத்துவக்கல்லூரிக்கு சகோதரரின் உடலை தானமாக பெண் வழங்கினார்.
    • பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் பெரியார் வீதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவரின் மனைவி சுசீலா தேவி. இவரின் தம்பி பிருதிவிராஜ் (வயது67). இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க சுசீலா தேவி முடிவு செய்தார்.

    இதுகுறித்த தகவலை நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் நேதாஜி அறக்கட்டளை நிர்வாகி ஹரி கிருஷ்ணனிடம் தெரிவித்து ள்ளார். அவரின் ஏற்பாட்டில் மரணம் அடைந்த பிருதிவி ராஜ் உடல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுசீலா தேவி தானமாக வழங்கினார். அவரின் இந்த சேவையை மருத்துவ கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    • ஆலங்குடி அருகே குளத்தில் வாலிபர் பிணம் மீட்கபட்டது
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் தனியார் மஹால் அருகே சாம்பிராணி குளம் உள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக்ரஜினி மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சடலத்தை மீட்டனர். இதையடுத்து சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கடந்த பத்து நாட்கள் வரை ஆலங்குடி மற்றும் இதர காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் மக்கள் நடமாட்டமும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் நிறைந்த பகுதியில் மிதந்த சடலத்தால் அவர் நீரில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே எசனை தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 25). இவர் அதே பகுதியில் மின்வாரிய ஊழியர்களுடன் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் கமலக்கண்ணன் வெளியூர் சென்று வருவதாக தனது தாயார் ராணியிடம் கூறி விட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை எசனை காட்டு மாரியம்மன் கோவில் பின்புறம் கீழக்கரையில் உள்ள கிணற்றில் கமலக்கண்ணன் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கமலக்கண்ணன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கமலக்கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து கமலக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கமலக்கண்ணனை யாரேனும் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கமலக்கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதும், அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    • காய்கறி வியாபாரம் செய்து வரும் முதியவர் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மேல அக்ராஹாரம் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 60).

    இவர் சைக்கிளில் காய்கறிகளை வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் ஆற்றில் சடலமாக முகமது யூசுப் கிடந்துள்ளார்.

    உடன் அக்கம் பக்கத்தினர் நன்னிலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    முகமது யூசுப் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வட மாநில ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் ஒரு ஓட்டல் பின்புற பகுதியில், அதே பகுதியை சேர்ந்த பாலமணியம்மாளுக்கு என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மாலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால், அந்தப்பகுதியில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஹோலிகிராஸ் பழைய குட்செட் ரோடு அருகில் இறந்து கிடந்தார்

    திருச்சி:

    திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய எல்லை பகுதியான தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிரஷ்ணபிரியா, கடந்த 19-ந்தேதி திருச்சி ஹோலிகிராஸ் பழைய குட்செட் ரோடு சாக்சீடு தொண்டு நிறுவனம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்ததாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில், திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கான புறநோயாளி சீட்டில் சமயபுரம் இந்திரா காலனி கேசவன் மகன் குருநாதன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் சமயபுரம் பகுதியில் விசாரணை நடத்தியபோது, இறந்துகிடந்த நபர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே இவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கோட்டை போலீஸ் நிலைய செல்போன் எண் 94981 00628, இன்ஸ்பெக்டர் தயாளன் 94981 56633, சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் 94981 56879 ஆகிய எண்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    • சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் எருமா பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் எனத்திமங்கலம் ஓந்தவாடி தெருவை சேர்ந்ததவர் நாராயணன். இவரது மகன் கோவிந்தசாமி (வயது 32), இவர் இன்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் எருமா பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்து விட்டார். தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதறிய படி சேலத்திற்கு விரைந்துள்ளனர். 

    • சாமிதுரை சகோதரி கலாவிற்கு அரசு வேலை வழங்க பரிந்துரை கடிதம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. கடந்த 27-ந்தேதி நள்ளிரவு வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

    இந்த கொலை தொடர்பாக கோதைசேரியை சேர்ந்த முருகேசன், திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய 2 பேர் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே சாமிதுரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் தரப்பில் இருந்து அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாமிதுரையை சகோதரி கலாவிற்கு அரசு வேலை வழங்க பரிந்துரை கடிதம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அந்த 2 வாக்குறுதிகளையும் எழுத்து பூர்வமாக கொடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வதாக சாமிதுரை உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று உடலை வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை கல்குவாரி விபத்தில் பலியானவாகளில் ஒருவரது உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். பாறைகளின் நடுவில் சிக்கிய 6-வது நபரான  ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் உடல் 8 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.

      இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்ற நிலையில் மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  அவர்களது உறவினர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் உடலை பெற்று செல்ல அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

     முன்னதாக குவாரி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை ராஜேந்திரனின் உறவினர்களிடம் இன்று கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    அப்போது ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மற்ற 2 பேரின் உறவினர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    ×