search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blockade"

    • சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை அங்கிருந்த தடுப்பு கட்டையில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது‌.
    • இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    கடலூர்:

    பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றி வந்த லாரி, கடலூர் சாவடியில் உள்ள ஒரு தடுப்பு கட்டை யில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். திருக்கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை கடலூர் சாவடியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தடுப்பு கட்டை யில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்தன. மேலும் லாரியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.      இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் சாவடியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவ தால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு,
    • மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேலம்:

    ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் வர்த்தக பிரிவு எம்.டி.சுப்பிரமணி, பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி, மேகநாதன், வக்கீல் பிரிவு ரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பழனி, திருமுருகன் வசந்தம் சரவணன், மாநகர பொதுச்செயலாளர் கோபி குமரன், உடையாபட்டி பிரகாஷ், சுரேஷ் பாபு, மொட்டையாண்டி, ஓ.பி.சி பிரிவு பர்வேஷ், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார், சிவக்குமார், வரதராஜ், இளைஞரணி ராஜ்பாலாஜி, ரத்தினவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைவாசல்

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து இன்று காலை, சேலம் மாவட்டம், தலைவாசல் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரைய்யா, வட்டாரத் தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், ஜே.பி.கிருஷ்ணா, ஆட்டையாம்பட்டி சாமி, தங்கராஜ், அருள்ஆனந்தம்,

    கண்ணன், ராமர், தன்ராஜ், சிவாஜி, சசிகுமார் குருசேவ், ரவிக்குமார், முருகேசன், அழகுவேல், நேதாஜி மணிமாறன், ராஜேஷ், வெள்ளையன், கிருஷ்ணன், நந்தினி, டைலர் கணேசன், ஜெய்ஆனந்த், மணிகண்டன், ஜெயபால், செல்வமுருகன், ஆத்தூர் சம்பத் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது
    • லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது.நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
    • நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் கணேஷ், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் ஆகியோர் மீது நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் நேற்றிரவு மாநில அமைப்புச் தலைவர் பழ.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், கடலுார் சண்.முத்துகிருஷ்ணன், விருத்தாசலம் கார்த்திகேயன், மாணவரணி வழக்கறிஞர் கோபிநாத், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள விவரத்தை பா.ம.க.வினரிடம் தெரிவித்தார்.

    இருப்பினும் போலீசார், தொடர்ந்து பா.ம.க.வினர் மீது வெறுப்புடன் நடந்து கொள்வதாக கூறி, கடந்த 20 தினங்களாக மாவட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மேற்கோள் காட்டினர். இச்சம்பவத்தால், மேலும் பிரச்சினைகள் ஏதும் நிகழாதவாறு போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிர்வாகிகள் வலியுறுத்தினர். விபத்து எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், எதிர்பாராத விதமாக நடந்தது எனவும், இதில் போலீசார் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிந்து உள்ளதால் ஏற்பட்ட பிரச்சினை என பா.ம.க.வினர் தெரிவித்தனர்.   தற்போது நடந்து வரும் விசாரணையை துரிதப்படுத்தி, யாரும் பாதிக்காத, சட்டரீதியிலான பாதுகாப்பு முறையில் நடவடிக்கை மேற்கொள்வதாக டி.எஸ்.பி. ராஜேந்திரன் உறுதி அளித்தார். அதன் பின்னர் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை– போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பணம் கட்டிய ரசீதுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    தஞ்சையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை–யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கூறினர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளுமு பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சையில் உள்ள அந்த கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பணம் கட்டிய ரசீதுடன் திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறு கூறினர்.

    இது குறித்து பாதிக்கப்–பட்ட பொதுமக்கள் கூறும்–போது, ஏழை எளிய மக்களின் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றியுள்ளனர். ரூ.10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பலரும் ஏமாந்துள்ளனர்.

    மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்று தர வேண்டும் என்றனர்.

    • பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டும் பணி நடைபெறுவதால் மாணவர்கள்-பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
    • நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி சாலையோரம் உயரமான அளவில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டப்படுவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலையில் உள்ளனர்.

    இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சா லைத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் மாணவர்கள் பணிகள் நடைபெறும் சாக்கடை கால்வாயில் ஏறி, இறங்கி பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலை தொடர்ந்தது.

    இதை கண்டித்து இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள், மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • திருமங்கலத்தில் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ரேசனில் தரம் குறைந்த அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதிப்பனூர் கிராமத்தில் சில மாதங்களாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்து வழங்குவதால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பலமுறை வட்ட வழங்கல் அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்து திருமங்கலம் ஊராட்சி யூனியன் அலுவ லகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தரமான அரிசி வழங்கியதாகவும், தற்போது மட்டமான அரிசி வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    • நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
    • கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    சேலம்:

    சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் தனியார் கட்டுமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தினரிடம் ஊழியர்கள் சம்பளம் கேட்டு வந்துள்ளனர். பல முறை கேட்டும் சம்பளம் வழங்கப்படாதால் நடவடிக்கை எடுக்க வேண்டி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கட்டுமான நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தி ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படாததால் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டோர் கட்டுமான அலுவலகத்திற்கு வந்து நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டுமான நிறுவனத்தினரிடமும் பாதிக்கப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் குடியிருப்புகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த பணியும் செய்யாமல் இருப்பதால் குடியிருப்புகள் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் செய்ய முடியாமல் அவதியில் உள்ளனர்.

    நேற்று அப்பகுதி மக்கள் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலர் மயில்வாகனத்திடம் கால்வாய் அமைக்க மனு வழங்கினர். பேரூராட்சி தலைவர் குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • 100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதாவது 800 பேர் உள்ள சாரம் கிராமத்தில் 140 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் 150க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களும் வசித்து வருகின்றனர் அவர்க ளுக்கும் நூறுநாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறாது.

    ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என சேர்மன் உறுதி அளித்த பெயரில்பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்க னக்கான பெண்கள் போராட்டத்தில் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    • மதுரை மேலூரில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் மறியல், முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் செக்கடியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மார்க்கெட்டின் கட்டிடம் பழமையானது என்பதால் அதனை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட நகராட்சி முடிவு செய்தது. இதன் காரணமாக செக்கடி காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை உழவர் சந்தை பகுதியில் தற்காலிகமாக கடையை அமைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் மணவாளன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று மேலூர் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகர் பகுதியிலேயே கடை அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரி வித்தனர்.

    இதுகுறித்து கமிஷனர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன், கவுன்சிலர் திவாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து போரா ட்டக்காரர்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டு மதுரை-திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×