search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூனியன் அலுவலகம்"

    • புதிய யூனியன் அலுவலக அமைவிடத்தில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் யூனியன் அலுவலகம் தற்போது ரெயில்வேபீடர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள இந்த அலுவலகம் கடும் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது.

    திருமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட போது யூனியன் அலுவல கத்தின் முன்புற பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படும் என பொதுபணி துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருமங்கலம் யூனியன் நிர்வாகம் அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது.

    அதில் கப்பலூர் அருகே உச்சப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதுமான நிலம் இருந்தது தெரிய வந்தது. இந்த இடத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே 75 சென்ட் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    அதன்படி அந்த இடமானது திருமங்கலம் பி.டி.ஓ. பெயருக்கு பெயர் மாற்றம் செயப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து புதிய யூனியன் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தூய்மை செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள், தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீர் செய்த பின்பு கற்கள் ஊன்றி கம்பிவேலி போடப்பட்டு நிதி ஒதுக்கீடு வந்தவுடன் கட்டிடப் பணிகள் தொடங்கப்்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்புவனம், மானாமதுரையில் யூனியன் அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • தமிழக மக்கள் பாராட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்று விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரையில் புதிய யூனியன் அலுவலகங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இரு இடங்களிலும் தனித்தனியாக நடந்த விழாக்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தனர். திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பொருளாதார நெருக்கடியை சீர் செய்து அனைத்து துறைகளின் சார்பில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அனைத்து துறைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார். கிராமப்புற மேம்பாட்டுக்கு தனித்துவம் அளித்து அதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராமப் பகுதிகளில் சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காகவும், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் நவீன வசதிகளுடன் உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த கட்டிடங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பெரு நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ். புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய அலுவலகங்கள் கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும், ரூ5. 55 கோடி மதிப்பீட்டில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும் கட்டப்பட உள்ளன. மாவட்டத்தில் மீதம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பற்றி பேசுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. தமிழக மக்கள் பாராட்டும் வகையில் அவர் செயல்படுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் இளையான்குடி ஒன்றிய செயலாளர்-முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, யூனியன் துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமத்தை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.
    • சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான ஊராட்சிகளை கொண்ட யூனியனாக கமுதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இது அபிராமம் பேரூராட்சி மற்றும் 53 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

    பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், முது குளத்தூர் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளை சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து அபிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அபிராமம் மற்றும் அதை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

    அபிராமத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிரமப்பட வேண்டியதுள்ளது.

    இதனை தவிர்க்க அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு கட்ட அகிம்சை வழி போராட்டங்களை நடத்த தயராக உள்ளோம்.

    மத்திய-மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்கள் இந்த கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இன்று வரை உள்ளது என்றனர்.

    • திருமங்கலத்தில் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ரேசனில் தரம் குறைந்த அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதிப்பனூர் கிராமத்தில் சில மாதங்களாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்து வழங்குவதால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பலமுறை வட்ட வழங்கல் அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்து திருமங்கலம் ஊராட்சி யூனியன் அலுவ லகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தரமான அரிசி வழங்கியதாகவும், தற்போது மட்டமான அரிசி வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    • அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் வராததால் யூனியன் அலுவலக கட்டிட பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
    • தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் சில இடங்கள் பழுதடைந்து விட்டதால் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இடம் தேர்வு செய்யப்பட்டடது.

    நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம்,கருவூலம் என அடுத்தடுத்து அலுவலகங்கள் அருகில் இருந்ததால் இந்த இடம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்து 2 முறையும் அமைச்சர் வராததால் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் நேற்று தி.மு.க இளைஞர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா உள்பட தி பலர் கலந்து கொண்டனர் .

    இந்த நிலையில் அமைச்சர் பூமிபூஜையை நடத்திவைப்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட ராஜபாளையம் மாடசாமி கோவில் செல்லும் சாலையில் யூனியன் அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 3-வது முறையாக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தது.

    நேற்றும் அடிக்கல் நாட்ட அமைச்சர் வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் 3-வது முறையாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பூமிபூஜைக்கான தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதில் தி.முக.வினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவுபட்டு கிடப்பதால் அரசு பணம் விரயம் ஆகிறது.

    பல்வேறு பணிகளை ஒதுக்கிவிட்டு இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 3-வது முறையாக பூமிபூஜை ஒத்தி வைக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    3-வது முறையாக பூமிபூஜை தடைபட்டுவிட்டதால் இதை கெட்ட சகுனமாக எடுத்துக் கொண்டு யூனியன் அலுவலகத்திற்கு வேறு இடம் தேர்வு செய்வதுதான் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • 100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதாவது 800 பேர் உள்ள சாரம் கிராமத்தில் 140 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் 150க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களும் வசித்து வருகின்றனர் அவர்க ளுக்கும் நூறுநாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறாது.

    ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என சேர்மன் உறுதி அளித்த பெயரில்பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்க னக்கான பெண்கள் போராட்டத்தில் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    ×