search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation work"

    • புதிய யூனியன் அலுவலக அமைவிடத்தில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் யூனியன் அலுவலகம் தற்போது ரெயில்வேபீடர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள இந்த அலுவலகம் கடும் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது.

    திருமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட போது யூனியன் அலுவல கத்தின் முன்புற பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படும் என பொதுபணி துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருமங்கலம் யூனியன் நிர்வாகம் அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது.

    அதில் கப்பலூர் அருகே உச்சப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதுமான நிலம் இருந்தது தெரிய வந்தது. இந்த இடத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே 75 சென்ட் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    அதன்படி அந்த இடமானது திருமங்கலம் பி.டி.ஓ. பெயருக்கு பெயர் மாற்றம் செயப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து புதிய யூனியன் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தூய்மை செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள், தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீர் செய்த பின்பு கற்கள் ஊன்றி கம்பிவேலி போடப்பட்டு நிதி ஒதுக்கீடு வந்தவுடன் கட்டிடப் பணிகள் தொடங்கப்்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்
    • இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணை பகுதியில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. சுமார் 510 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காப்புகாட்டில், 10 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 1938ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. மொத்தம் 46.3 அடி உயரம் உள்ள இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையை சுற்றி உள்ள பகுதிகளில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் மனோஜ்பிரபாகர் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    • 10 டன் அளவிற்கு குப்பை தேங்கியுள்ளது.
    • தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    கோவை

    கோவை வ. உ .சி மைதானத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதையடுத்து வ.உ.சி மைதானத்தில் தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வ.உ.சி மைதானத்தில் பொருட்காட்சி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. மேலும் தொடர் பொங்கல் விடுமுறை வந்ததால் அதிகமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    இதனால் வ.உ.சி மைதானம் முழுவதும் 10 டன் அளவிற்கு குப்பை தேங்கியுள்ளது. இதனை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    குப்பைகள்

    இந்த பணியில் 50 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கு கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை வ.உ.சி மைதானத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மைதானத்தை சுத்தம் செய்து நாளை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம். தொடர் விடுமுறையாளும், பொருள்காட்சி நடந்ததாலும் பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர்.

    இதனால் வ.உ.சி மைதானம் முழுவதும் அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதுவரை 5 லாரிகளில் குப்பைகளை சேகரித்துள்ளோம். 10 டன் அளவிற்கு குப்பைகள் தேங்கி உள்ளது. தொடர்ந்து சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நாளை மைதானத்தை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதால் 50 தூய்மை பணியாளர்களை 30 பேர், 20 பேர் என பிரித்து சுழற்சி முறையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி இன்று காலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இரவு 7 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடுவோம்.

    இந்த குப்பைகளை பொருட்காட்சி நிர்வாகம் தான் அகற்றி தர வேண்டும். ஆனால் அவர்கள் செய்யாததால் நாங்கள் செய்து வருகிறோம். நாளைக்குள் முடிப்பதற்காக பணிகளை தீவிரமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    • சுகாதார பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.
    • தேனி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாருதல் உள்பட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், துணைத்தலைவர் செல்வம், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகராட்சி பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலமுருகன், நாராயண பாண்டியன், கடவுள், பிரிட்டிஷ் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது 42 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டது.

    தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுகாதாரம் குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்கள்.

    அப்போது சுகாதார பணிகளை தொய்வின்றி சீராக செய்வதற்கு வார்டு வாரியாக மாஸ் கிளீனிங் செய்யலாம் என எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்குமாறு எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

    இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக தங்களது வார்டுகளில் அங்கன்வாடி மையம், ரேசன் கடை, சமுதாயகூடம், கழிப்பிட வசதி, உயர்கோபுர மின்விளக்கு, தெரு மின்விளக்கு, சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி, மற்றும் தேனி மீறுசமுத்திர கண்மாய் பகுதியில் நடைபாதை மற்றும் படகு சவாரி ஏற்படுத்துதல், தேனி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாருதல் உள்பட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இதில் 33-வது வார்டு கவுன்சிலர் கடவுள் தனது வார்டு பகுதியில் உள்ள வள்ளுவர் வாசுகி காலனி பகுதியில் உள்ள 200 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் கவுன்சிலர்களின் கோரிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள கூடிய பணிகள் முதற்கட்டமாக நிறைவேற்றவும், அதன் பின்னர் இதர கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 108 குளம் மற்றும்ஏரி, உள்ளது. இதில் நகரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் தெருவில் அக்னி தீர்த்தம் எனப்படும் அரியாண்டி குளம் உள்ளது. இந்த குளம் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. தற்போது பலராலும் ஆக்கிரமிப்பு செய்யபட்டு குளத்தின் பரப்பளவு குறைந்தது.

    குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன் எதிரொலியாக கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கணக்கில் உள்ளப்படி 18-க்கும் மேற்பட்ட குளங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு குளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில் அரியாண்டி குளத்தை நகராட்சி தலைவா் புகழேந்தி, துணைத் தலைவர் மங்களநாயகி, ஆணையர் ஹேமலதா, பொறியாளார் முகமது இப்ராஹீம், வார்டு கவுன்சிலர் திருக்குமரன் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் உள்ள செடி, கொடிகள் , ஆகாயத் தாமரையும் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து அந்த குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.

    ×