search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "retaining wall"

  • மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
  • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும்.

  பொன்னேரி:

  மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வல்லூர் கொண்டக் கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயில் சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

  ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இந்த தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால் 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

  நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும். தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

  இதனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் நிறுத்தி விட்டுச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.
  • வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் இருந்து தவறி விபத்தில் சிக்குகின்றன.

  உடுமலை :

  உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி தரை மட்ட பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

  பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது ்உடைந்து விழுந்தது. சரியான முறையில் கட்டப்படவில்லை என்று அப்போது பொதுமக்கள் புகார் கூறினர். இந்நிலையில் இரவு - பகல் என இந்த பாலத்தில் கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் இருந்து தவறி விபத்தில் சிக்குகின்றன. இதற்கு காரணம் தடுப்புச் சுவர் இல்லாதே என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். பாலத்தில் காணப்படும் சிறிய தூண்களால் எந்த பயனும் இல்லை. முழுமையாக தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
  • ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

  அரவேணு,

  கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

  இவர்கள் மலை காய்கறிகள் மட்டுமின்றி ஏற்றுமதி தர வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

  கூக்கல்தொரை விவசாயிகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரையும், ஓடேன் ஓடையை நம்பி எரிசிபெட்டா, ஓடேன்துறை கிராம விவசாயிகளும், காக்காசோலை ஓடையை நம்பி அப்பகுதி விவசாயிகளும், குருகுத்தி ஓடையை நம்பி குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா விவசாயிகளும் உள்ளனர்.

  கடந்த சில ஆண்டுகளாக இந்த ஓடைகள் உரிய முறையில் தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

  மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

  இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த ஓடைகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

  இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை நன்கு தூர் வார முடிவு செய்யப்பட்டது.

  இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் தொடங்கின.

  முதற்கட்டமாக நில அளவை செய்யபட்டு, விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடேன் ஓடை, காக்கா சோலை ஓடை மற்றும் குருகுத்தி ஓடை ஆகியவை ஆழமாக தூர்வாரப்பட்டன.

  மேலும் ஓடைப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

  இந்த பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  இது குறித்து வேளாண் பொறியியல் துறை உதவி கோட்ட பொறியாளர் பாலன் கூறியதாவது:-

  கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருந்ததால், மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்து, அடிக்கடி தாழ்வான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமாகி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

  இதையடுத்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ஓடைகளை தூர் வார முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டு ஓடேன் ஓடையில் 2200 மீட்டர் நீளத்திற்கும், காக்கா சோலை ஓடையில் 1500 மீட்டர் நீளமும், குருகுத்தி ஓடையில் 2020 மீட்டர் நீளமும் தூர் வாரும் பணிகள் நடைபெற்றது.

  தற்போது ஓடை பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
  • நாதல்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

  சீர்காழி:

  சீர்காழியை அருகே உள்ள முதலை மேடு திட்டும், நாதல் படுகை கிராம மக்கள் ஒன்று திரண்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்தனர்.

  பின்னர் தாசில்தார் செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

  தற்போது திட்டு கிராமத்தில் செய்து வரும் நிவாரண பணிகள் தற்காலிகமானது.

  நிரந்தரமாக தங்கள் பகுதிகளுக்கு செய்து தரவேண்டிய பணிகளாக கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.

  திட்டு கிராம சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும்.

  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவனை அமைத்து தரவேண்டும்.

  கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பரிசீலனை செய்யவில்லை என்றால் வருகின்ற 4 -ஆம் தேதி கொள்ளிடம் கடைவீதியில் நாதலப்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • குலசேகரநல்லூர் கிராமத்தில் ஆரைக்குளம் முதல் மலர்குளம் வரையிலான ஓடையில் சுடலைமாடசாமி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
  • மழைக்காலங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வலியுறுத்தினார்.

  ஓட்டப்பிடாரம்:

  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் ஊராட்சி குலசேகரநல்லூர் கிராமத்தில் ஆரைக்குளம் முதல் மலர்குளம் வரையிலான ஓடையில் சுடலைமாடசாமி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

  மேலும் மழைக்காலங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வலியுறுத்தினார்.

  நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய துணைச்செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

  • குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 108 குளம் மற்றும்ஏரி, உள்ளது. இதில் நகரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் தெருவில் அக்னி தீர்த்தம் எனப்படும் அரியாண்டி குளம் உள்ளது. இந்த குளம் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. தற்போது பலராலும் ஆக்கிரமிப்பு செய்யபட்டு குளத்தின் பரப்பளவு குறைந்தது.

  குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

  அதன் எதிரொலியாக கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கணக்கில் உள்ளப்படி 18-க்கும் மேற்பட்ட குளங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு குளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

  இந்நிலையில் அரியாண்டி குளத்தை நகராட்சி தலைவா் புகழேந்தி, துணைத் தலைவர் மங்களநாயகி, ஆணையர் ஹேமலதா, பொறியாளார் முகமது இப்ராஹீம், வார்டு கவுன்சிலர் திருக்குமரன் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் உள்ள செடி, கொடிகள் , ஆகாயத் தாமரையும் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  தொடர்ந்து அந்த குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.

  ×