உடுமலை அருகே தரைமட்ட பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் இருந்து தவறி விபத்தில் சிக்குகின்றன.
பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் கட்டப்படாமல் இருப்பதை படத்தில் காணலாம். 
பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் கட்டப்படாமல் இருப்பதை படத்தில் காணலாம். 
Published on

உடுமலை :

உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி தரை மட்ட பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது ்உடைந்து விழுந்தது. சரியான முறையில் கட்டப்படவில்லை என்று அப்போது பொதுமக்கள் புகார் கூறினர். இந்நிலையில் இரவு - பகல் என இந்த பாலத்தில் கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் இருந்து தவறி விபத்தில் சிக்குகின்றன. இதற்கு காரணம் தடுப்புச் சுவர் இல்லாதே என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். பாலத்தில் காணப்படும் சிறிய தூண்களால் எந்த பயனும் இல்லை. முழுமையாக தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com