search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
    X

    யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பெண்களை படத்தில் காணலாம்.

    100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

    • 100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதாவது 800 பேர் உள்ள சாரம் கிராமத்தில் 140 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் 150க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களும் வசித்து வருகின்றனர் அவர்க ளுக்கும் நூறுநாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறாது.

    ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என சேர்மன் உறுதி அளித்த பெயரில்பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்க னக்கான பெண்கள் போராட்டத்தில் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    Next Story
    ×