search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசீது"

    • விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர்பான ரசீது அனுப்பப்படுவது உண்டு.
    • காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேசமாட்டார்கள்,

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. சென்னை மாநகரில் தினமும் 5 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படும் நிலையில்15 பேர் மட்டுமே தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று அப்பீல் செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர் ன ரசீது அனுப்பப்படுவது உண்டு. அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல் துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று போலீசார் தெரித்துள்ளனர்.

    இதற்காக புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதா ங்கள் போன்றவற்றைக் காட்டி வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை முதலில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.

    அதன் பிறகு எந்த விதிமுறைகளில் சம்பந்தப் பட்ட வாகனம் ஈடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறை மூலமாக அவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் அது போன்று பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம் இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை– போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பணம் கட்டிய ரசீதுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    தஞ்சையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை–யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கூறினர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளுமு பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சையில் உள்ள அந்த கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பணம் கட்டிய ரசீதுடன் திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறு கூறினர்.

    இது குறித்து பாதிக்கப்–பட்ட பொதுமக்கள் கூறும்–போது, ஏழை எளிய மக்களின் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றியுள்ளனர். ரூ.10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பலரும் ஏமாந்துள்ளனர்.

    மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்று தர வேண்டும் என்றனர்.

    • 6241 மெட்ரிக் டன், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • சாம்பல், சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் ெரயில் மூலம் சின்னசேலத்திற்கு வந்தடைந்தது. இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 2688 மெட்ரிக் டன், டிஏபி 1212 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1363 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 838 மெட்ரிக் டன், மற்றும் காம்ப்ளக்ஸ் 6241 மெட்ரிக் டன், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான எம் எஃப் எல் யூரியா 876 மெட்ரிக் டன் யூரியா சென்னையில் இருந்து சின்னசேலம் ெரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) அன்பழகன் ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல், சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தினார். மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×