search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP-"

    • ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    கோவை:

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13-ந் தேதி பாரதீய ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப் பதில்லை. தண்ணீர் கிடைக்கா ததற்கு காரணம் ஆனை மலையாறு மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற் றப்படாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் நீண்ட கால கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், தற்போதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 13-ந் தேதி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில்ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றகோரிக்கை வைத்து மாவட்டத்தலைவர் வசந்தராஜன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன ்சத்திரத்திற்கு தண்ணீர்கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக கோரியும  கோரிக்கை வைக்கப்பட உள்ளது.  

    அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அசாம் கனபரிஷத் கட்சி நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது. #AsomGanaParishad #BJP #CitizenshipBill
    கவுகாத்தி:

    ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவில் தங்கி உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் 6 ஆண்டுகள் தங்கினாலே இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அசாம் கனபரிஷத் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். ஆனால் இதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அசாம் கனபரிஷத் கட்சி நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

    அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பா.ஜ.க. 61 இடங்களிலும், அசாம் கனபரிஷத் கட்சி 14 இடங்களிலும், போடோலாண்ட் மக்கள் முன்னணி கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணிக்கு சுயேச்சை ஒருவரும் ஆதரவு தெரிவித்து உள்ளார். தற்போது அசாம் கனபரிஷத் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும் பா.ஜனதா அரசுக்கு 74 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. #AsomGanaParishad #BJP #CitizenshipBill 
    ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் கேள்வி எழுப்பினால் சேற்றை வாரி இறைப்பதா? என மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #RafaleScam #Congress #BJP
    புதுடெல்லி:

    ரபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க மோதலில் உச்சமாக, ரபேல் ஒப்பந்தத்தை சீர்குலைக்க ராகுல் காந்தி சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளார் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு பதிலடியாக மத்திய அமைச்சர்கள் அனைவரும் பதில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில்:-

    ரபேல் விமான கொள்முதல் ஊழல் குறித்து கேள்வியை எழுப்பினால் பா.ஜ.க சேற்றை வாரி இறைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் போது நாங்கள் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு நாங்கள் ஒப்பந்தம் கொடுத்தோம். ஆனால், பிரதமர் மோடி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். 

    இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அம்பானியிடம் கொடுத்துள்ளார். இது குறித்து நாங்கள் விளக்கம் கோரினால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தைகளையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையே பேசுகிறார்கள்.

    இந்த நாடு அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதையை கேட்டிருக்கிறது, இப்போது மோடியும், 40 சகாக்களும் ரபேல் ஊழலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்கிறது. பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? அல்லது அம்பானிக்கு பிரதமரா?'' என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 
    டெல்லியில் இன்று நடைபெற்று வரும் பாஜக பொதுக்குழுவில் வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJPinternalpolls #AmitShah
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைவராக இருந்த நிதின் கட்கரி மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதால் பாஜக தலைவர் பதவியில் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதேபோல் அக்கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் கூடிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் தலைமை பதவியில் அமித் ஷா நீடிப்பார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    முன்னதாக,  டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கிய செயற்குழு கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமித் ஷா, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

    உயர்சாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாக சிலர் குறிப்பிடும் நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.


    மேலும், தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உரிய அங்கீகாரம் அளிப்பது உள்பட பாராளுமன்றத்தில் கிடப்பில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி நிறைவு உரையாற்றும்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. #BJPinternalpolls #AmitShah  
    வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் 24-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தயிருக்கிறோம் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

    திசையன்விளை:

    திசையன்விளை அனைத்து வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கடைபிடிக்க முடியாத சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்ட விதிகளை நிர்ணயம்படுத்த வேண்டும், 28 சதவிகிதம், 18 சதவிகிதம் வரி விதிப்புகளை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன அரசு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற நேரத்தில் இன்று பிலிப்காட் நிறுவனத்தை வாங்கி வால்மார்ட் நிறுவனம் பொய்யான புள்ளி விபரங்களை தருகிறார்கள்.

    ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று அப்பட்டமான பொய் புகாரோடு வால்மார்ட் நிறுவனம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். பிலிப்காட் நிறுவனம் வாங்கிய 87 சதவிதம் பங்குகளை உடனடியாக திருப்பி பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் வரும் 24-ந் தேதி ஆயிரக்கணக்காண வணிகர்களை தமிழகத்தில் இருந்து அழைத்து சென்று பேரணி மற்றும் தர்ணா நடத்தயிருக்கிறோம்.

    இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார். #vikramaraja

    சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சிக்கு தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்பட்டு வருகிறது. கட்சியை எப்படி நடத்த வேண்டும், அதன் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைகளை வழங்குவது உண்டு.

    இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா எப்படி எதிர்கொள்வது என்பது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று அந்த கூட்டம் முடிவு பெறுகிறது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தேர்தல் தொடர்பாக சில ஆலோசனைகளை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி உள்ளனர். அதில், தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்கள் செயல்பாடுகளை முற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதற்காக தனியாக சர்வே ஒன்றை எடுக்க வேண்டும். அவர்களுடைய செயல்பாடுகளை முற்றிலும் அலச வேண்டும். அவர்கள் தொகுதியில் எப்படி பணிகளை செய்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா? வருகிற தேர்தலில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை தர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    இவர்களில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும் நபர்கள் யாருக்கும் மீண்டும் டிக்கெட் கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்ற தொகுதிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.


    மேலும் உத்தரபிரதேசத்தில் தற்போது கட்சியின் நிலைமை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அங்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது பாரதிய ஜனதாவை எந்த வகையில் பாதிக்கும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக எதை செய்யலாம் என்றும் ஆலோசித்து உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தல் போலவே பெரும் வெற்றியை பெறுவதற்காக முக்கிய நபர்கள் பலரை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்ற கூட்டங்களை இந்த ஆண்டில் இன்னும் பல தடவை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக பிரதமர் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தேர்தலை சந்திப்பது தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். அப்போது கூட்டத்தில் நடந்த ஆலோசனை தொடர்பாக பிரதமருடன் அவர்கள் விவாதித்து உள்ளனர். #BJP #RSS
    ×