search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness rally"

    • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.
    • நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

    தாரமங்கலம்:

    வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.

    விழிப்புணர்வு

    ராகி, கம்பு, சோளம் குதிரைவாலி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளை பயிரிடுவதில் உள்ள தொழில் நுட்பங்கள், அதனை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

    இதில் விவசாயிகள் சிறுதானிய உணவு வகை பயிர்களை நன்கு பராமரிக்க நுனி கிள்ளுதல், யூரியா பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் கஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் கோபி, வேளாண் அலுவலர்கள் சதீஷ் பாபு. செல்வி, தில்லைக்கரசி, தொழில்நுட்ப மேலாளர் அகிலா மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
    • ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்த விழிப்புணர்வு பேரணியானது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    விழிப்புணர்வு

    இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

    பேரணி குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. சிறுவர்களுக்கு வாகனங்களை கொடுத்து அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது என்றார்.

    • விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் ராமலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "பருகுவோம், பருகுவோம் தூய்மையான நீரை பருகுவோம், காப்போம் காப்போம் குடிநீரின் தரத்தை காப்போம், தேக்குவீர் மழைநீர் பாதுகாப்பீர் குடிநீர், முயல்வோம் முயல்வோம் நீரின் தரம் உயார்ந்த முயல்வோம், அறிவோம், ஆய்வோம் குடிநீரின் தரத்தை அறிவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம், தூய சவேரியார் கல்லூரி வழியாக தூய யோவான் பள்ளி வரை சென்றனர்.

    மேலும் பேரணியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. தொடர்ந்து, இவ்வாகனம் மூலம் முக்கிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சின்னராசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி நிர்வாக பொறியாளர்கள் மயில்வா கனம், ராமசாமி, டேனியஸ் மற்றும் மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்

    காரைக்குடி

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியை காரைக் குடியில் நடத்தினர்.நெடுஞ் சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை, உதவி கோட்டப் பொறியாளர் அரிமுந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலை வர் முத்துதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத் தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பேர ணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை ஏந்தி நகரில் வலம் வந்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய்குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் பூமிநாதன், சாலை ஆய்வாளர்கள், பணியா ளர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
    • பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் இளைஞர் எழுச்சி தின பேரணி பாளை வ.உ. சி. மைதானம் முன்பு இன்று தொடங்கியது.

    பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர்கள் ஹரிராமா, பெர்னாட் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, ம.தி.தா பள்ளி ஆசிரியர் சோமு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.இந்தப் பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை நாட்டு நலப் பணித்திட்டம் செய்திருந்தது.

    • நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
    • நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சென்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூரில் நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை நெடுஞ்சாலைத் துறை கோபி கோட்ட பொறியாளர் ஜெய லட்சுமி தொடங்கி வைத்தார்.

    பேரணியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு வேண்டும் உள்ளிட்ட வசங்களுடன் பதாகைகளை ஏந்தி நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்றனர்.

    பேரணியில் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் விஜய லட்சுமி, கதிர்வேல், உதவி பொறி யாளர்கள் சந்தோஷ், வேந்தன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியா ளர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், மழைநீர் உயிர் நீர். வடகிழக்கு பருவமழைக் கால மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    இதில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர், துணை மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கேசா டி மிர் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ஆண்டுதோறும் அக்டோபர் 11-ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரீத்தி அறிவுறுத்துதலின்படி ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி துவங்கி வைத்தார். காந்தி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இப்பேரணியில் பெண் குழந் தைகளின் முக்கியத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளி தாளாளர் வைமா.திருப்பதி செல்வன் மற்றும் பள்ளி முதுநிலை முதல்வர் டி.அருணா தேவியின் வழி காட்டுதலின்படி நடைபெற்ற இப்பேரணி பள்ளி முதல்வர் அ.திருமலை ராஜன் விழா ஒருங்கிணைப்பாளர் ரா.ரேஷ்மா மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

    • மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தளிர்விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள், எக்ஸல் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12-ந் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனுசெய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி ஜே.கே.கே ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்திருந்தனர்.

    • அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்.
    • பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க நிர்வாகிகள் மகுடபதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கோபால், நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன், நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

    முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் சித்த மருத்துவ டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேற்று முன்தினம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா சாலை, பஸ் நிலையம், பள்ளிசாலை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
    • பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒன்றியம் சார்பாக 0-18 வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடைபெற இருக்கும் இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இப்பேரணி என்.ஜி.ஜி.ஓ காலனியில் அமைந்துள்ள அரசு பொண்ணு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நடைபெற்றது இந்த பேரணியில் மாற்றுத்திறன் மாணவ மாணவர்களுக்கு உண்டான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்,ஆசிரிய- ஆசிரியைகள்,பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    • கொடைக்கானலில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது.
    • அன்னை தெரசா பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில் வன உயிரின வார விழாவை சிறப்பிக்கும் வகையில் அன்னை தெரசா பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமை தாங்கினார்.

    கொடைக்கானல் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், ரேஞ்சர்கள் சிவக்குமார், செந்தில்குமார், சுரேஷ், முத்துராமலிங்கம், குமரேசன், பாலகிருஷ்ணன், அழகுராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் மோகன், வீரா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள், அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வன உயிரின வார விழா சைக்கிள் பேரணி ஏரி சாலை முழுவதும் சுற்றி நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.

    சைக்கிள் பேரணியில் வனத்தை பாதுகாப்பது மரம் வளர்ப்பது அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அணிந்தபடி மாணவிகள் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்திருந்தனர். நாளை (8ந் தேதி) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், ேமாயர்பாய்ண்ட், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் ெதாடங்கி உள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×