என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
குமாரபாளையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தளிர்விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள், எக்ஸல் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12-ந் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனுசெய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி ஜே.கே.கே ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்திருந்தனர்.






