என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள்.
குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
- ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.
விழிப்புணர்வு
இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.
பேரணி குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. சிறுவர்களுக்கு வாகனங்களை கொடுத்து அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது என்றார்.






