search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assault"

    • ஓட்டல் உரிமையாளரை தாக்கினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

    • நடராஜன் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
    • ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கடன் தவணை கட்டாத வரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். வாகனம் வாங்கியதற் கான தவணை தொகையை சரியாக கட்டி முடித்ததால் டி.வி.எஸ்., கிரிடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் ரூ.50 ஆயிரம் நடராஜனுக்கு வழங்கினர்.

    இதற்கான மாத தவணை தொகையை சரியாக கட்டவில்லை. நேற்று முன்தினம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்., பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ், ந-டராஜனிடம் தவணை தொகை கேட்டார். இதில் விக்னேஷ்க்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விக்னேஷ் நடராஜனை தாக்கினார். இதனால் காயமடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • பாலமுருகன் மனைவியை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39).தொழிலாளி. இவருக்கும் இவரது அண்ணன் ராமனுக்கும் முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று அண்ணன் தம்பிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமன் மற்றும் அவருடன் வந்த 4 ேபர்கள் திடீரென்று பாலமுருகனை தாக்கினார்கள். இதனை தடுக்க சென்ற பாலமுருகன் மனைவி யை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ராமன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே முதியவர் தாக்கப்பட்டார்.
    • சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    சேத்தூர் வளையல் தெருவை சேர்ந்தவர் ஆணைக்குட்டி (65). இவர் விவசாய நிலங்களில் மாட்டுக்கிடை அமைத்து கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே உள்ள சிவக்காடு பகுதியில் மாட்டு கிடை அமைத்திருந்தார்.

    நள்ளிரவு அங்கு ஆணைக்குட்டி காவல் பணி மேற்கொண்டிருந்த போது மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நீலமேகம், நாயகம் ஆகிய 2 பேர் வந்து தகராறு செய்து ஆணைக்குட்டியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாலிபர் மீது தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் இந்திரா காலனியை சேர்ந்தவர் கருத்தபாண்டி(வயது45). இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு அந்தப்பகுதியில் நடந்து வந்தார். அப்போது 2 நாய்களும் சண்டையிட்டு கடித்துக்குதறியது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கருத்தபாண்டியை, ராம்குமார், அவரது தந்தை கனகராஜ், உறவினர் மாரிமுத்து ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கருத்தபாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் நாகராஜ்(வயது50). இவரிடம் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் ரூ. 90 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அதனை அவர் திருப்பித்தரவில்லை. சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு வந்த நாகராஜ் கடனை திருப்பித்தருமாறு குருசாமியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குருசாமி, நாகராஜை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை அய்யப்பநாயக் கன்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவர். மகாலிங்கம் சித்திரை திருவிழாவை யொட்டி பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தனர்.

    இதனை மகாலிங்கம் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 ேபரும் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக மகாலிங்கம் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்தவர் மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பூவராகவன், ராமதாஸ் ஆகியோர் மோகனை வழிமறித்து இரும்பு கம்பி யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் முது நகர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
    • தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது குழந்தையை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெரு கலியமூர்த்தி மகன் தமிழரசன் (வயது 31). இவர் நேற்று தனது மாமியார் வீட்டில் இருந்து தனது குழந்தையை அழைத்து வர பணப்பாக்கம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பனப்பாக்கம் காலணியை சேர்ந்த தன்ராஜ் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். இரவு நேரத்தில் எதற்கு இவ்வளவு வேகமா போறீங்க என தமிழரசன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குதம் தகராறாக மாறியது. இதில் தன்ராஜ், பாலமுருகன், சூர்யா ஆகியோர் தமிழரசன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தமிழரசன் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
    • டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்துாரில் டாக்டர் ஞானமணி (வயது 35) மற்றும் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் (36) ஆகியோர் இணைந்து கிளினிக் வைத்து நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதில் டாக்டர் ஞானமணி அம்பகரத்துார் பகுதியிலேயே தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இதனால் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பஷீர் உள்ளிட்ட 31 பேர் ஞானமணி கிளினிக்கில் புகுந்து டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த டாக்டர் ஞானமணி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அம்பகரத்துார் போலீசார் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம அருகே உள்ள சட்டிக்கிணறு பகுதிைய சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 38). இவர் ெசாந்தமாக ஆட்ேடா வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது ஆக்டிங் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சத்துணவு கூடத்தில் பணியாற்றும் 35 வயதுடைய பெண் பொறுப்பாளருக்கும், விஜயராகவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது தொடர்பை நீடித்து வந்துள்ளனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம், அந்த பெண்ணின் கணவர் ராஜசேகருக்கு தெரிய வந்தது. விஜயராக வனுடனான கள்ளத்தொ டர்பை கைவிடுமாறு மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சட்டி கிணறு பகுதியில் விஜய ராகவன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் உள்பட 3 பேர் தகராறு செய்து விஜயராகவனை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்தது. அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜயராகவன் புகாரின் கொடுத்தார். அதன்பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர்.
    • மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள்.


    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.

    கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 

    ×