search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunraja Kamaraj"

    சிவகார்த்திகேயன் நண்பர் ஸ்ரீதர் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. #Vaibhav
    வால்மேட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்க, சாச்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் சச்சி திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது பற்றி அவர் கூறும்போது, "எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் வைபவிடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது, அவர் நடித்த படங்களை பார்த்தாலே தெரியும்" என்றார். 

    மேலும், "வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர்  தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத ரொமாண்டிக் காமெடி திரைப்படம் வித்தியாசமான திரைப்படம் ஒன்றும் இல்லை. என் படத்திலும் ஒரு நாயகன், ஒரு நாயகி மற்றும் ஒரு வில்லன். நாயகன் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர், ஒரு எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் படத்தின் கதை. 



    ஆனால், அதை படமாக்கிய விதம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். காமெடி நடிகர் சதீஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது. இந்த படத்தை வால்மேட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீதரும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவிந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். #Vaibhav

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிறார். #Kanaa #AishwaryaRajesh
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளனர். இந்த பாடலின் மூலம் ஆராதனா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார்.

    தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம், நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kanaa #AishwaryaRajesh #Sivakarthikeyan #AaradhanaSivakarthikeyan

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கனா’ படத்தில் இடம் பெறும் ஒரு நாட்டுப்புற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். #Kanaa #Anirudh
    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கனா’. அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இவர் ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார். அந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.

    இதுகுறித்து இசையமைப்பாளர் திபுநினன் தாமஸ் கூறும்போது, ‘அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது. நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்’ என்றார்.

    மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். 

    இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத், டி.இமான் ஆகியோர் வெளியிடுகிறார்கள். மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அவரே இசையை வெளியிட இருக்கிறார்.

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `கனா' படத்தின் இசை மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் `கனா'. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்
    திருக்கிறார். 

    இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 
    நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kanaa #AishwaryaRajesh #Sathyaraj

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் `கனா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kanaa #AishwaryaRajesh
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் கனா. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. 

    படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

    திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Kanaa #AishwaryaRajesh
    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம். #NatpunaEnnanuTheriyuma
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    படம் வருகிற ஜூலை 20-ல் ரிலீசாக இருக்கிறது. #NatpunaEnnanuTheriyuma #Kavin #RemyaNambeesan

    தொலைக்காட்சியில் நடிகர் கவின் சினிமாவில் அறிமுகமாகும் நட்புன்னா என்னனு தெரியுமா படம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், தனது சினிமா அனுபவம் குறித்து கவின் மனம் திறந்தார். #NatpunanEnnanuTheriyuma #Kavin
    சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னனு தெரியுமா? படம் மூலம் சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் வரிசையில் இவரும் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோ ஆகிறார்.

    படம் பற்றி அவரிடம் பேசினோம், ‘நட்பையும் காதலையும் ஒருசேர சொல்லும் படம் இது. காதலை விட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம். எனக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ், ராஜு, இளவரசு, மொட்ட ராஜேந்திரன், அழகம்பெருமாள், சுஜாதா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

    ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலிப்பது தான் கதைக்கரு. இந்த படத்துக்காக நானும், இயக்குனர் சிவா அரவிந்தும் 18 தயாரிப்பாளர்களிடம் முயற்சித்து கடைசியில் லிப்ரா புரடக்‌‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சம்மதித்தார்.



    சினிமாவுக்கும், சீரியலுக்கும் ரொமான்ஸ் காட்சிகள் தான் வித்தியாசம். சீரியலில் காதலிப்பது சுலபம். ஆனால் சினிமாவில் நெருங்கினால் தான் காதல். ஹீரோயினை தொட்டு நடிக்க சிரமப்பட்டேன்.

    நான் புதுமுகமாக இருந்தாலும் ரம்யா நம்பீசன் ஈகோ பார்க்காமல் என்னுடன் நன்றாக பழகினார். தரண் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன’ என்று கூறினார். நட்புன்னா என்னனு தெரியுமா படம் ஜூலை 20-ந் தேதி வெளியாக இருக்கிறது. #Kavin#NatpunanEnnanuTheriyuma 

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார். #Kanaa
    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

    ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா. 



    ஐஸ்வர்யாவுடன் தான் இருக்கும் படத்தை பதிந்து அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் வாட்மோர். சமீபத்தில் வெளியான கனா படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். #Kanaa #Vijay
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



    விஜய் வாழத்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    'என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டது. உங்களிடம் இருந்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன். உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் தகாது. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    அருண்ராஜா காமராஜ் விஜய்யின் பைரவா படத்தில் வரலாம் வரலாம் வா, பைரவா என்ற பாடலை எழுதி, பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #Vijay #ArunRajaKamaraj #AishwaryaRajesh

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார். #Sivakarthikeyan
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய  படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி இப்படத்திற்கு ‘கனா’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 



    திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions
    தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #AishwaryaRajesh
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 



    இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions

    ×