search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thibu Ninan Thomas"

    கனா படத்தின் வெற்றி விழாவில், ஓடாத படங்களுக்கு சிலர் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று தான் கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa
    சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாகி வரவேற்பை பெற்ற கனா படத்தின் வெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கனா படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி. சிலர் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’’ என்றார். 

    அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் மேடை அருகில் சென்று பேச்சை முடித்துவிட்டு கொஞ்சம் கீழே வந்துவிடுங்கள் என்றார். 



    தொடர்ந்து சத்யராஜ் பேசும்போது ‘‘ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதை நான் ஆமோதிக்கவில்லை’’ என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் கிளம்பின. இதைத்தொடர்ந்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:–


    ‘‘கனா வெற்றி விழாவில் நான் விளையாட்டாகத்தான் அப்படி பேசினேன். எந்த படத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாரையும் நான் காயப்படுத்தியது இல்லை. எல்லா படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். படம் எடுத்து வெற்றியடைய செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.’’

    இவ்வாறு கூறியுள்ளார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa

    கனா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா மட்டும் கொண்டாடுவார்கள். இது உண்மையான வெற்றி விழா என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh
    ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான கனா படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்ராஜாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.

    இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்றார். இதுதான் உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’. இவ்வாறு அவர் கூறினார்.



    சிவகார்த்திகேயன் பேசும்போது ‘என்னை நடிகர் என்றே கூப்பிடுங்கள். அதுதான் நிரந்தரம். அதில் இருந்து தொடங்கியதுதான் மற்றது எல்லாம். இந்த படத்தின் வெற்றி மூலம் கிடைத்த லாபம் எங்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளுக்கும் சென்று சேரும். அவர்கள் வலியை பேசிய படம் அவர்கள் வாழ்க்கையையும் மாற்ற நிச்சயம் உதவும்’ என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa #Sivakarthikeyan

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கனா படத்தின் விமர்சனம். #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj
    கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் சத்யராஜ். குடும்பம், விவசாயம், கிரிக்கெட் மூன்றையும் உயிராக கருதுபவர். அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்றுப்போக அதை பார்த்து சத்யராஜ் கண் கலங்குகிறார்.

    தனது அப்பா கண் கலங்குவதை முதல்முறையாக பார்த்து வருத்தப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க தானே இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும். அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.



    மேலும் தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் அண்ணன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்குகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை விரும்பாத அவரது அம்மாவான ரமா அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறார்.

    மேலும் ஊர் மக்கள், சூழ்நிலை, தேர்வாளர்கள், சக அணி வீராங்கனை, எதிர் அணி என வரிசையாக முட்டுக்கட்டைகளை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதேநேரத்தில் சத்யராஜும், விவசாயத்தில் சரிவை சந்திக்கிறார்.



    அதேநேரத்தில் அதே கிராமத்தில் வசித்து வரும் நாயகன் தர்ஷனுக்கு ஐஸ்வர்யா மீது காதல் வருகிறது. தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்ல பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்.

    இவ்வாறாக தனக்கு வரும் தடைக்கற்களை எல்லாம், ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி படிக்கற்களாக மாற்றினார்? இந்திய அணியில் விளையாடி தனது அப்பவை எப்படி சந்தோஷப்படுத்துகிறார்? தர்ஷனின் காதல் என்னவானது? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

    தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்குவது, பீல்டிங் செய்ய தெரியாமல் விழுவது என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாகவே தெரிவது அவரது நடிப்பின் சிறப்பு. அப்பாவிடம் பாசம், அம்மாவிடம் பிடிவாதம், அணிக்காக விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாக காட்டுகிறார். சோகத்தை மறைத்து அப்பாவிடம் பேசும் காட்சி அவரின் நடிப்புத்திறமைக்கு ஒரு பதம்.



    விவசாயியாக விவசாயத்தின் அருமையை புரிய வைக்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மனதில் பதிகிறார். வாழ்ந்து கெட்ட விவசாயியை பிரதிபலிக்கிறார். அவருக்கு இணையாக ரமா கிராமத்து சராசரி தாயாக தனது பாணியில் நடித்து கவர்கிறார். 

    ஜெட் வேகத்தில் செல்லும் படம் நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன் வந்த பிறகு ராக்கெட் வேகத்துக்கு பறக்கிறது. அவர் பேசும் தன்னம்பிக்கை வசனம் ஒவ்வொன்றும் பாடம். கடைசி அரை மணி நேரம் இருக்கை நுனிக்கே கொண்டு வருகிறார்.

    இளவரசு, தர்‌ஷன், முனீஸ்காந்த், சவரி முத்து, ஆண்டனி பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யாவின் கிரிக்கெட் தோழர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.



    ஒரு தமிழ்ப்பெண்ணின் கனவு, தமிழ்நாட்டு விவசாயியின் வேதனை நிலை என இரண்டு வெவ்வேறு கதையை ஒரே நேர்க்கோட்டில் அழகாக இணைத்து ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டுக்கள். அழிந்து வரும் விவசாயத்தை மக்களுக்கு புரிய வைக்க விளையாட்டை தேர்ந்தெடுத்தது சிறப்பு. கிரிக்கெட்டுக்காக உயிரைக் கொடுக்கும், கொண்டாடும் நம் நாட்டில், சோறு போடும் விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்டுகொள்வதில்லையே என்ற ஆதங்கத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்கள்.

    விளையாட்டில் சாதிக்க ஆசைப்படும் தமிழ்ப்பெண்ணுக்கும், விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கும் தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக காட்டலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருப்பது இயக்குநரின் திறமை.



    “இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா”, “ஒண்ணு லஞ்சம் கொடு, இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க”, “ஜெயிச்சுடுவேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சுட்டு சொன்னா தான் கேட்கும்” என வசனங்கள் ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. கிரிக்கெட் போலவே சினிமாவும் கூட்டுமுயற்சி தான். அனைத்து துறைகளும் ஒருசேர கனாவை சாம்பியனாக்கி இருக்கின்றன.

    திபுநிணன் தாமஸ் தனது இசையால் படத்தையே தாங்கி பிடித்து இருக்கிறார். பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையில் நம்மை ஒன்ற வைக்கிறார். பசுமை, வெறுமை, வறுமை, தேசபக்தி அனைத்தையும் வண்ணங்களால் பிரித்து காட்டுகிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ரூபனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `கனா' வெற்றி. #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj #Darshan

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் - தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கனா' படத்தின் முன்னோட்டம். #Kanaa #AishwaryaRajesh #Darshan #ArunrajaKamaraj
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் `கனா'.

    ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த், ரமா, சவரிமுத்து, அந்தோணி பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.

    இசை - திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் பி, படத்தொகுப்பு - ரூபன், கலை - லால்குடி என். இளையராஜா, பாடல்கள் - மோகன் ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ், நடன இயக்குனர் - சதீஷ் கிருஷ்ணன், கிரியேட்டிவ் டிசைன்ஸ் - வின்சி ராஜ், ஸ்டண்ட் - ஸ்டன்னர் சாம், ஆடை வடிவமைப்பு -  பல்லவி சிங், தயாரிப்பாளர் - சிவகார்த்திகேயன், இணை தயாரிப்பாளர் - கலையரசு, எழுத்து, இயக்கம் - அருண்ராஜா காமராஜ்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றிய பேசிய இயக்குநர் கூறியதாவது,

    கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும். ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது. கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம். சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார் என்றார்.

    படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh #Darshan #ArunrajaKamaraj

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் மூலம் ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் என்று படத்தில் நடித்துள்ள தர்ஷன் கூறினார். #Kanaa #AishwaryaRajesh #Darshan
    நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், முனீஷ்காந்த், நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இந்த படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமாகும் தர்ஷன் படம் பற்றி கூறும்போது,

    என்னுடைய கனவு `கனா' படம் மூலம் நனவாகியிருக்கிறது. அருண்ராஜா காமராஜ் எனக்கு கிராமத்து பின்னணியில் உள்ள ஒரு பையனை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இது நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கொண்டது. எனது கதாபாத்திரம் மற்றும் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இடையிலான உறவை அவர் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்.



    இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டாகியிருக்கிறது. பார்வையாளர்கள் என்னை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். கனா (கனவு) ஒரு பொதுவான உணர்வு, அல்லவா? எனக்கு மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் படத்துடன் ஒரு வகையான பிணைப்பு இருந்தது. ரசிகர்கள் அவர்களுடைய சொந்த கனவு திரையில் பிரதிபலித்திருப்பதாக உணர்வார்கள்.

    விருதுகள் மற்றும் பாராட்டுக்களை தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் கௌசல்யாவாக எல்லோர் மனதிலும் நிற்பார். சத்யராஜ் சாரின் சிறிய அமைதியான நடிப்பு கூட பேச முடியாத வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தும் என்றார். #Kanaa #AishwaryaRajesh #Darshan

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Kanaa #AishwaryaRajesh
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    ஏற்கனவே விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களும் டிசம்பர் 20, 21-ஆம் தேதிகளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் கனா படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 4 படங்களுக்கு தேதி ஒதுக்குவதிலே பிரச்சனை இருக்கும் நிலையில், கனா படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Kanaa #AishwaryaRajesh

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    ஏற்கனவே வெளியான படத்தின் இசை மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கம் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடலை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். #Kanaa #AishwaryaRajesh
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் `கனா'.

    மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, வைக்கம் விஜயலட்சுமி இணைந்து பாடிய `வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

    இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது,

    " தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு  பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த அருண்ராஜாவுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என்றார்.

    படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிறார். #Kanaa #AishwaryaRajesh
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளனர். இந்த பாடலின் மூலம் ஆராதனா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார்.

    தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம், நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kanaa #AishwaryaRajesh #Sivakarthikeyan #AaradhanaSivakarthikeyan

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `கனா' படத்தின் இசை மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் `கனா'. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்
    திருக்கிறார். 

    இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 
    நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kanaa #AishwaryaRajesh #Sathyaraj

    ×