என் மலர்

  சினிமா

  கனா
  X

  கனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் - தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கனா' படத்தின் முன்னோட்டம். #Kanaa #AishwaryaRajesh #Darshan #ArunrajaKamaraj
  சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் `கனா'.

  ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த், ரமா, சவரிமுத்து, அந்தோணி பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.

  இசை - திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் பி, படத்தொகுப்பு - ரூபன், கலை - லால்குடி என். இளையராஜா, பாடல்கள் - மோகன் ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ், நடன இயக்குனர் - சதீஷ் கிருஷ்ணன், கிரியேட்டிவ் டிசைன்ஸ் - வின்சி ராஜ், ஸ்டண்ட் - ஸ்டன்னர் சாம், ஆடை வடிவமைப்பு -  பல்லவி சிங், தயாரிப்பாளர் - சிவகார்த்திகேயன், இணை தயாரிப்பாளர் - கலையரசு, எழுத்து, இயக்கம் - அருண்ராஜா காமராஜ்.  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றிய பேசிய இயக்குநர் கூறியதாவது,

  கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும். ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது. கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம். சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார் என்றார்.

  படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh #Darshan #ArunrajaKamaraj

  Next Story
  ×