என் மலர்

  சினிமா

  5 கோடி பார்வையாளர்கள் பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் - சிவகார்த்திகேயன் பெருமிதம்
  X

  5 கோடி பார்வையாளர்கள் பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் - சிவகார்த்திகேயன் பெருமிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடலை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். #Kanaa #AishwaryaRajesh
  சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் `கனா'.

  மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, வைக்கம் விஜயலட்சுமி இணைந்து பாடிய `வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

  இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது,

  " தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு  பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த அருண்ராஜாவுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என்றார்.

  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh

  Next Story
  ×