என் மலர்
சினிமா

ஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையான வெற்றி - ஐஸ்வர்யா ராஜேஷ்
கனா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா மட்டும் கொண்டாடுவார்கள். இது உண்மையான வெற்றி விழா என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான கனா படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்ராஜாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.
இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்றார். இதுதான் உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’. இவ்வாறு அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் பேசும்போது ‘என்னை நடிகர் என்றே கூப்பிடுங்கள். அதுதான் நிரந்தரம். அதில் இருந்து தொடங்கியதுதான் மற்றது எல்லாம். இந்த படத்தின் வெற்றி மூலம் கிடைத்த லாபம் எங்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளுக்கும் சென்று சேரும். அவர்கள் வலியை பேசிய படம் அவர்கள் வாழ்க்கையையும் மாற்ற நிச்சயம் உதவும்’ என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa #Sivakarthikeyan
Next Story






