என் மலர்
சினிமா

சீரியலுக்கும் சினிமாவுக்கும் ரொமான்ஸ் தான் வித்தியாசம் - கவின்
தொலைக்காட்சியில் நடிகர் கவின் சினிமாவில் அறிமுகமாகும் நட்புன்னா என்னனு தெரியுமா படம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், தனது சினிமா அனுபவம் குறித்து கவின் மனம் திறந்தார். #NatpunanEnnanuTheriyuma #Kavin
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னனு தெரியுமா? படம் மூலம் சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் வரிசையில் இவரும் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோ ஆகிறார்.
படம் பற்றி அவரிடம் பேசினோம், ‘நட்பையும் காதலையும் ஒருசேர சொல்லும் படம் இது. காதலை விட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம். எனக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ், ராஜு, இளவரசு, மொட்ட ராஜேந்திரன், அழகம்பெருமாள், சுஜாதா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலிப்பது தான் கதைக்கரு. இந்த படத்துக்காக நானும், இயக்குனர் சிவா அரவிந்தும் 18 தயாரிப்பாளர்களிடம் முயற்சித்து கடைசியில் லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சம்மதித்தார்.

சினிமாவுக்கும், சீரியலுக்கும் ரொமான்ஸ் காட்சிகள் தான் வித்தியாசம். சீரியலில் காதலிப்பது சுலபம். ஆனால் சினிமாவில் நெருங்கினால் தான் காதல். ஹீரோயினை தொட்டு நடிக்க சிரமப்பட்டேன்.
நான் புதுமுகமாக இருந்தாலும் ரம்யா நம்பீசன் ஈகோ பார்க்காமல் என்னுடன் நன்றாக பழகினார். தரண் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன’ என்று கூறினார். நட்புன்னா என்னனு தெரியுமா படம் ஜூலை 20-ந் தேதி வெளியாக இருக்கிறது. #Kavin#NatpunanEnnanuTheriyuma
Next Story






