என் மலர்
நீங்கள் தேடியது "Raju"
- இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
கதைக்களம்
ராஜுவும், மைக்கேலும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ராஜுக்கு பெண்கள் என்றாலே பயம். நாயகி பவ்யாவை கல்லூரியில் பார்த்து பேசியதும் ராஜுக்கு பயம் பறந்து போய் விடுகிறது. இதிலிருந்து பவ்யாவும் ராஜுவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். பவ்யாவை ஒருதலையாக காதலிக்கும் மைக்கேல், ராஜுவிடம் சண்டை போட்டு பிரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு புறம் ராஜுவின் தாய் சரண்யா, பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆதியாவோ விஜே பப்புவை காதலித்து வருகிறார்.
இறுதியில் ராஜுவின் காதல் என்ன ஆனது? சண்டை போட்டு சென்ற நண்பர் மைக்கேல் மீண்டும் ராஜுவுடன் சேர்ந்தாரா? பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை திருமணம் செய்யும் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராஜு, ஒரு சில இடங்களில் எதார்த்தமாகவும் ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காகவும் நடித்திருக்கிறார். நண்பனுக்காக ஏங்குவது, காதலியை நினைத்து உருகுவது, வாழ்க்கையில் வெற்றி பெறப் போராடுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நண்பனாக நடித்திருக்கும் மைக்கேல், நண்பனா காதலியா என்று தவிக்கும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். வி ஜே பப்பு ஆங்காங்கே வந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா, தான் யாரை காதலிக்க வேண்டும், தனக்கு ஏற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துறுதுறு பெண்ணாக நடித்த மனதில் பதிந்து இருக்கிறார் ஆதியா. சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நட்புக்காக வரும் விக்ராந்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
இயக்கம்
இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறார்கள் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். உண்மை காதல், உண்மை நட்பு, காதல் திருமணம், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம், காதலித்து பிளஸ் பெற்றோர் நிச்சயம் செய்து நடத்தும் திருமணம் என்று பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் காதல் என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளும்படி திரைக்கதை அமைக்காதது வருத்தம் அளிக்கிறது. நிறைய லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் சம்பந்தமில்லாமல் ஒலிக்கிறது.
ஒளிப்பதிவு
பாபு குமாரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
Rain Of arrows Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மொத்தத்தில் பன் பட்டார் ஜாம் டேஸ்ட் இல்லை
- கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
- திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் மூன்றாம் பாடலான காஜுமா பாடல் மற்றும் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
- கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
- திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டது அதை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான காஜுமா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’.
- இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. .
இந்த நிகழ்வில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, :
"இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும். அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கு தான் நன்றி சொல்லணும்.. ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்த பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது.. அது கொஞ்சம் லேட் ஆனதால இதை பண்ணேன்.
இன்றைய ஜென்-சிக்கு ஒரு டீப்பான விஷயத்தை எப்படி ஷேர் பண்ணி கொடுக்கனும்னு தெரிஞ்ச ஒரு டைரக்டர். தான் ராகவ் மிர்தாத்..எல்லாருமே என்னை ஹீரோன்னு சொல்றாங்க.என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு. ஒத்துப்பேன்.
ஒருத்தர் ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரும் திரும்பி பார்க்க வெச்சாரு.. தளபதி விஜய் ஒரு போன் கால்ல எனக்கு பண்ணி கொடுத்தாரு. அவரு என்னை எப்படி பாக்குறாரு? அவருக்கு என்னை பிடிக்குமா? இல்ல என்ன விஷயத்துக்காக எனக்கு இத வாழ்த்துனார் அப்படிங்கறதெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் இருக்கு. அவர் சொன்ன விஷயம் தான் இன்னைக்கு நிறைய பேருக்கு எங்க படம் தெரிஞ்சிருக்கு சமீபத்துல ஒரு நிகழ்வுல. அவரோட ரசிகர்களை எல்லாம் பாத்து நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலப்பா அப்படின்னாரு. நான் அவர்கிட்ட சொல்றேன் நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா" என்று பேசினார்..
- கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டது அதை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான காஜுமா பாடலை படக்குழு நாளை வெளியிட இருக்கின்றனர். இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர்.
- கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
- பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டது அதை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலை வரும் 4 ஆம் தேதி வெளியிட இருக்கிறது என வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- பன் பட்டர் ஜாம் ஸ்டீலர் திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மகன் ராஜு-க்கும் அம்ம சரண்யா பொன்வன்ணனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜு தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் உன்மைலே தியேட்டர் பாக்கணும்னு தோணுது என நடிகரும் தவெக தலைவருமான விஜய் பாராட்டி உள்ளதாக இந்த படத்தின் கதாநாயகன் ராஹூ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அன்பான தளபதியிடமிருந்து அழைப்பு வந்தது படத்தின் ஸ்டீலர் "வேரா லெவல் பா... உன்மைலே தியேட்டர் பாக்கணும்னு தோணுது"
நான் வேறு என்ன கேட்க முடியும்? நான் இன்று தளபதியை சிரிக்க வைத்தேன்... இதுதான் எனக்கு உலகம்.
இது நிஜமா?
ஆஹா!! நன்றி தலைவா!!!!
என கூறினார்.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மனக்ன் ராஜு-க்கும் அம்ம சரண்யா பொன்வன்ணனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜு தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
- இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
- பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- இயக்குநர் ராகவ் மிர்தாத் பன் பட்டர் ஜாம் படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தியா தியா பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இளம் தலைமுறையின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு திரைப்படமாகும். படத்தின் முதல் பாடலான எதோ பேசதானே பாடல் விஜய் சேதுபதி வரிகளில் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான தியா தியா பாடலை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளனர். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின்
30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது. அனைவரின் கை தட்டல்கள் உடன் கதாநாயகன் ராஜூ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்பு தோன்றி பேசி நன்றி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வில்
இயக்குனர் ராகவ் மிர்தாத் பேசும்போது,
"கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுத்துக்கொண்டு கைகளாலேயே வரையப்பட்ட போஸ்டர் தான் இது. வாழ்க்கையில் நிறைய போராட்டம் நடக்கும். எல்லோருடைய மனதிலும் ஒரு போர்க்களம் இருக்கிறது. பல பிரச்சனைகளால் நாம் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமலேயே நாளை பார்த்துக் கொள்வோம் என கடந்து செல்வோம். ஆனால் திடீரென ஒருநாள், நாளை என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் அந்த கணத்தின் சந்தோஷத்தை அப்போதே அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த போஸ்டர் மூலமாக சொல்ல நினைத்தேன்" என்றார்.
நாயகன் ராஜு பேசும்போது,
"என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான். அதனால் எந்த தேவதை கை கொடுத்தாலும் அந்த தேவதையின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு மேலே வந்து விட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் நானே எனக்காக படம் பண்ணலாம் என்று நினைத்து என்னுடைய கெட்டப்பை மாற்றி என் வீட்டிலேயே என்னை அடையாளம் புரியாத அளவுக்கு ஆளே மாறிப்போனேன். அதன் பிறகு நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், நம்மை எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நடித்த படம் தான் இந்த 'பன் பட்டர் ஜாம்'.
அதுபோல எனக்காக கதையை எழுதிய இயக்குனர், இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் என நான்கு தலைகள் தான் என்னுடைய தலையெழுத்தை தீர்மானிக்க போகிறீர்கள்" என்றார்
ஏனென்றால் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்ததால் ரியாலிட்டி என்னவென்று எனக்கு தெரியும். எப்போதுமே கதை தான் ஹீரோ. கதை சரியாக இருந்தால் மட்டும்தான் ஒரு நல்ல நடிகன் உருவாக முடியும் என்பதை நான் திடமாக நம்புகிறேன். ஐந்து வருடத்திற்கு முன்பாக எஸ்.ஜே சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதில் நீயே நடி என்று கூறி எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதை எழுதுவதற்காக மற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி சென்றதால் நாட்கள் போனதே தெரியவில்லை. அதிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அதன் கடைசி பகுதியை எழுதும்போது, நமக்கு யாராவது கேக் போல ஒரு கதையுடன் வந்தால் அழகாக நடித்துவிட்டு போகலாமே என்று நினைத்த சமயத்தில் தான் இந்த படம் என்னை தேடி வந்தது.
ஒரு நடிகனாக வேண்டுமென்றுதான் சென்னைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கவே, நமக்கான கதையை நாமே எழுதி படத்தை இயக்கிக் கொள்ளலாம் என்று தான் பாக்யராஜ் சாரிடமும் நெல்சனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றினேன். ஆனால் நடித்து விடலாமே என்று நினைக்கும் அளவிற்கு டைரக்ஷன் பணி கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. அதேசமயம் பிக்பாஸ் முடிந்தவுடன் நானே எழுதி, இயக்கி, நடிக்கும் விதமாகத்தான் வாய்ப்பு உருவானது. அதில் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதும், மக்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று தான் இந்த பட வாய்ப்பு வந்ததும் நடிகராக மாறிவிட்டேன். எது எப்போது நடக்குமோ அப்போது நடக்கும் என்று நம்புகிறேன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த போது அதன் இயக்குனர் ஜோஷ்வா மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.