என் மலர்
சினிமா செய்திகள்

Bun Butter Jam படத்தின் தியா தியா பாடல் இன்று மாலை வெளியீடு
- பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இளம் தலைமுறையின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு திரைப்படமாகும். படத்தின் முதல் பாடலான எதோ பேசதானே பாடல் விஜய் சேதுபதி வரிகளில் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான தியா தியா பாடலை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளனர். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.






