என் மலர்
நீங்கள் தேடியது "Saranya Ponvannan"
- இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- பன் பட்டர் ஜாம் ஸ்டீலர் திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மகன் ராஜு-க்கும் அம்ம சரண்யா பொன்வன்ணனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜு தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் உன்மைலே தியேட்டர் பாக்கணும்னு தோணுது என நடிகரும் தவெக தலைவருமான விஜய் பாராட்டி உள்ளதாக இந்த படத்தின் கதாநாயகன் ராஹூ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அன்பான தளபதியிடமிருந்து அழைப்பு வந்தது படத்தின் ஸ்டீலர் "வேரா லெவல் பா... உன்மைலே தியேட்டர் பாக்கணும்னு தோணுது"
நான் வேறு என்ன கேட்க முடியும்? நான் இன்று தளபதியை சிரிக்க வைத்தேன்... இதுதான் எனக்கு உலகம்.
இது நிஜமா?
ஆஹா!! நன்றி தலைவா!!!!
என கூறினார்.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மனக்ன் ராஜு-க்கும் அம்ம சரண்யா பொன்வன்ணனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜு தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
- நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டின் அருகே நிறுத்தி இருந்ததாக தெரிகிறது.
- சரண்யா பொன்வண்ணன் ஆவேசத்துடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
பிரபல சினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவிக்கும், நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டின் அருகே நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அப்போது ஸ்ரீதேவி ஆஸ்பத்திரிக்கு செல்ல தனது காரை எடுப்பதற்காக வீட்டின் இரும்பு கேட்டை திறந்தார். இதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் காரில் இரும்பு கேட் உரசியது.
இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆவேசத்துடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் ஸ்ரீதேவி புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரண்யா.
- இவர் முன்னணி நடிகர்கள் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.
அவரது சாதுவான தோற்றமும், கதாபாத்திரத்தில் அவர் காட்டும் கலகலப்பும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்
ஆனால் விஜய்க்கு மட்டும் இதுவரை அவர் அம்மாவாக நடிக்கவில்லை. இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரண்யா பொன்வண்ணன் கூறும்போது, "தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்கும் அந்த வாய்ப்பு இதுவரை அமையவில்லை. விஜய்க்கு அம்மாவாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அந்த எண்ணம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்று கூறினார்.









Mark ✔️ your Calendar 🔥🔥🔥🔥🔥 for #KolamaavuKokila#Nayanthara@anirudhofficial@Nelson_director#CocofromAug10#KabiskabaaCoCopic.twitter.com/fPLxAIq7Yr
— Lyca Productions (@LycaProductions) July 12, 2018
I know I am a little late.. the trailer of #Kolamavukokila is outstanding 👏👏 Can’t wait to watch this film . All the very best to this team and #Nayanthara for having balls of steel 🙏🙏 @anirudhofficial#NelsonDilipkumar
— Samantha Akkineni (@Samanthaprabhu2) July 11, 2018
#KabiskabaaCoco - #TheGibberishSong#KolamaavuKokila Trailer & Full Album from July 5th🔥🔥🎼🎹🥁🔥🔥 #Nayanthara@anirudhofficial@Nelson_director@Siva_Kartikeyan@Arunrajakamarajpic.twitter.com/fjw24Wa2Qz
— Lyca Productions (@LycaProductions) July 3, 2018










