சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்

நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டின் அருகே நிறுத்தி இருந்ததாக தெரிகிறது.சரண்யா பொன்வண்ணன் ஆவேசத்துடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்
Published on

பிரபல சினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவிக்கும், நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டின் அருகே நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அப்போது ஸ்ரீதேவி ஆஸ்பத்திரிக்கு செல்ல தனது காரை எடுப்பதற்காக வீட்டின் இரும்பு கேட்டை திறந்தார். இதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் காரில் இரும்பு கேட் உரசியது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆவேசத்துடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் ஸ்ரீதேவி புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com