என் மலர்

  நீங்கள் தேடியது "Kolamaavu Kokila"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் குயின் படத்தின் ரீமேக்கான `பாரிஸ் பாரிஸ்' படத்தின் டீசர் நயன்தாரா படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. #ParisParis #ParisParisTeaser #KajalAggarwal
  கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் குயின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

  இதில் தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ள படத்திற்கு ‘பாரீஸ் பாரீஸ்’ என்றும், கன்னடத்தில் பருல் யாதவ் நடித்துள்ள படத்திற்கு பட்டர்பிளை என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

  காஜல் அகர்வால் இந்த படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசரில் ஒரு காட்சியில் காஜல் அகர்வாலை அவரது தோழி பாலியல் ரீதியாக சீண்டுவது போல இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.  நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தின் டீசரை 60 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில், காஜல் அகர்வாலின் இந்த டீசரை 72 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. #ParisParis #ParisParisTeaser #KajalAggarwal #RameshAravind 

  பாரிஸ் பாரிஸ் டீசர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனம். #KolamavuKokilaReview #Nayanthara
  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் பெர்ணான்டசுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, சாந்த சுபாவமுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

  குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் பத்தாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் சரண்யா பொன்வண்ணனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதை சரிசெய்ய முடியும் என்றும், அதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.   இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ண நயன்தாரா முயற்சி செய்கிறார். இந்த நிலையில், போதைப்பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை கொடுத்து ஒரு இடத்தில் கொண்டு கொடுக்க சொல்கிறது. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறார்.

  இதையடுத்து தனது அம்மாவை காப்பற்ற பணம் தேவைப்படுவதால், போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாரா அந்த கும்பலின் தலைவரிடம் பணம் வாங்குகிறார்.  கடைசியில், இந்த போதைப் பொருள் கடத்தல் நயன்தாராவுக்கு எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது? அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார்? தனது அம்மாவை காப்பாற்றினாரா? யோகி பாபுவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  தனது ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை கொடுக்கிறது.   நயன்தாராவின் சாந்தத்தை பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். கல்யாண வயசு பாடலை பார்க்கவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரையரங்கில் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

  சரண்யா பொன்வண்ணன் யதார்த்தமான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். ஜாக்குலினின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. முதல் படம் போல இல்லாமல், ரசிகர்களை கவரும்படியாகவே ஜாக்குலின் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஹரிஷ் பேரிடி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா என மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.  தனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள். தனது அம்மாவை காப்பாற்ற போதை பெருள் கடத்தலில் ஈடுபடும் நயன்தாரா அதில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். 

  அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட்தான். திரையில் பார்க்கவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `கோலமாவு கோகிலா' கொண்டாட்டம். #KolamavuKokilaReview #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் முன்னோட்டம். #CoCo #KolamavuKokila #Nayanthara
  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. 

  நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஹரிஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ஆர்.எஸ்.சிவாஜி, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இசை - அனிருத், படத்தொகுப்பு - ஆர்.நிர்மல், ஒளிப்பதிவு - சிவக்குமார் விஜயன், கலை இயக்குனர் - ஏ.அமரன், ஸ்டில்ஸ் - சித்தராசு, ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், வீரா பாபு, மேக்கப் - ஷயீக் பாஷா தயாரிப்பு - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், எழுத்து, இயக்கம் - நெல்சன் திலீப்குமார்.  தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamavuKokila #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது என்று நயன்தாரா நிகழ்ச்சியொன்றில் பேசிய நயன்தாரா தெரிவித்தார். #KolamaavuKokila #CoCo #Nayanthara
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை உறுதிப்படுத்தும்படியாக இருக்கிறது. 

  வெளிநாடுகளில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

  மேலும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் சில தகவல்கள் வருகின்றன. ஆனால் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருவரும் காதலை வளர்த்து வருகிறார்கள். 

  நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக கோலமாவு கோகிலா வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.   இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். படத்தில் இடம்பெற்ற பாடலொன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார். 

  அவர் கூறும்போது, “இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது” என்றார். #KolamaavuKokila #CoCo #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாகும் அதே தினத்தில், நயன்தாராவின் திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். #Nayanthara
  நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ . நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நயன்தாராவுடன் இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், கமலின் ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் இப்படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.  தற்போது ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர். #CoCo #KolamaavuKokila #Nayanthara
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யூடியூப்பில் மிகவும் பிரபலமான பிஜிலி ரமேஷ், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். #Nayanthara
  நயன்தாரா நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் அஜித்துடன் ‘விஸ்வாசம்’, அறிவழகன் இயக்கும் படம், சர்ஜுன் இயக்கும் படம், சிவகார்த்திகேயன் படம் அடுத்துடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

  இதில் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

  படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘கபீஸ்கபா’ என்ற பாடலின் புரமோ வீடியோவை அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் யூ-டியூபில் மிகவும் பிரபலமான பிஜிலி ரமேஷ் நடனமாடியுள்ளார். தற்போது இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருபட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
  நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீசாக இருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படமும் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமந்தாவும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். #KolamaavuKokila #CoCo #Nayanthara
  நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பாராட்டுக்களையும் பெற்றது. ஜூலை 5-ஆம் தேதி வெளியான இந்த டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

  இந்த நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா தெரிவித்திருப்பதாவது,

  `இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
  நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படம் போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில், நயன்தாராவை நினைத்து பெருமை படுவதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். #Nayanthara #VigneshShivan
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

  இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

  இப்படத்தில் ‘ஒரே ஒரு...’என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாராவை நினைத்து பெருமைப்படுவதாக கூறியிருக்கிறார். மேலும் உனது நம்பிக்கை, புதிய திறமை மீதான நம்பிக்கை, புதிய ஸ்கிரிப்ட் மற்றும் திரையில் நீ சென்று கொண்டிருக்கும் பாதை ஆகியவை உண்மையில் ஊக்கமளிக்கிறது. இந்த படத்தில் பாடல் எழுதியதற்கு சந்தோஷப்படுகிறேன் என்று பதிவு ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.  விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #KolamaavuKokila #Nayanthara
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
  நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

  நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 
  இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
  நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

  நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 
  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

  நயன்தாரா தற்போது `கொலையுதிர் காலம்', அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, `கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #YogiBabu #Nayanthara
  தனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார் யோகி பாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிக வேகமாக 50 படங்களை கடந்து 100வது படத்திலும் நடித்து வருகிறார்.