Bun Butter Jam படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!

கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
Bun Butter Jam  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!
Published on

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் மூன்றாம் பாடலான காஜுமா பாடல் மற்றும் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com