என் மலர்
சினிமா

தன் படத்தின் தலைப்பை அறிவித்தார் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார். #Sivakarthikeyan
நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படத்திற்கு ‘கனா’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions
Next Story






