search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arson"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது.
    • அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே.

    இம்பால்:

    பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் உயிரிழந்தனர் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    என்றாலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சார்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், முதல்-மந்திரி பிரேன் சிங் மாநில தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

    அப்போது, 'மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, வீடுகளுக்கு தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.

    அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    கக்சிங், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், விஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள் மீது ஆயுதம் தாங்கிய குகி பழங்குடியின தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவுமுதல் தாக்குதல் நடத்தினர். மேற்கு இம்பாலின் பயெங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    கக்சிங் மாவட்டம், சுக்னு கிராமத்தில் 80 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்ததால், நள்ளிரவில் வீடுகளை விட்டு, மக்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அங்கு, தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது.

    இதில், போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    கிழக்கு இம்பாலில் இரு வீடுகளுக்கு தீவைத்ததுடன், கிராமமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கிராமத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 2 பேர் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.

    மணிப்பூரில் 7 ஆயுத கிட்டங்கிகள் உள்ளன. போலீசாருக்கான துப்பாக்கிகள் மற்றும் கருவிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் 3 கிட்டங்கிகளில் புகுந்து ஆயுதங்களை சூறையாடினார்கள்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை அள்ளி சென்றனர். இதனால் மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துள்ளது. குகி இன போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் துணையுடன் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

    பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 2 தினங்களாக போராட்டம் மற்றும் தாக்குதலால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 கிராம மக்கள் முற்றிலுமாக வீடுகளை இழந்துள்ளனர். குகி இன போராட்டக்காரர்கள் எம்.16 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

    நிலைமை கட்டுமீறி போவதால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூர் விரைகிறார். அவர் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடும் வரை அவர்களை வேட்டையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

    • போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது50) கூலி தொழிலாளி.இவர் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் பணம் கொடுக்காததால் மனைவியு டன் தகராறில் ஈடுபட்டார். அப்போது போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார். இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவி துடித்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் முத்துகுமரனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
    • வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரங்கதுரை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வைத்தீஸ்வரி தரப்பினருக்கும், ரங்கதுரை தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மேலும் வைத்தீஸ்வரியை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    மோதலில் ரங்கதுரை தரப்பில் சபிதா என்பவரு க்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வைத்தீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரங்கதுரை மற்றும் 5 பேர் மீதும், சபிதா கொடுத்த புகாரின் பேரில் குமரேசன் உட்பட 3 பேர் என 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கன்னங்குறிச்சியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை ெசய்து கொண்டார்.
    • குடிப்பழக்கம் உடைய முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடைக்கு சென்று ஜூஸ் வாங்கி வருமாறு முருகன் அவரது மனைவியை அனுப்பி உள்ளார். அவர் கடைக்கு சென்று வரு வதற்குள் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடிசைக்கு தீ வைப்பு

    இக்கொலையை சிலர் தவறாக சித்தரித்தன் விளை வாக வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தகர சீட், ஓலை வேய்ந்த குடிசைகள் மற்றும் புதுப் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகை ஆகியவை மர்ம நபர்களால் தீ வைக்கப் பட்டது. தீ வைத்தவர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வடகரையாத்தூர் மேல்முகம் கிராமம் சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 டிராக்டர்கள் மற்றும் தகர வீடு தீ வைக்கப்பட்டது. மேலும் வடகரையாத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து இந்த சம்பவங்களீல் தொடர்பு உடையவர்களை தேடி வருகிறார்கள்.

    அடுத்தடுத்த சம்பவங்க ளால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதை தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்ய. மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-

    இந்த பகுதியில் அசாதா ரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பா விதங்களை உருவாக்க நினைப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் கிராமத்தில் அமைதி நிலை காக்க கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத் துழைப்பு வழங்க வேண்டும்.

    கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக வடகரை யாத்தூர் மற்றும் வீ.கரைப் பாளையம் கிராம பகுதியை சேர்ந்த இருதரப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் டி.எஸ்.பி. கலையரசன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயி ஒருவர் அவரது கரும்பு தோட்டத்தில் சறுகுகள், காய்ந்த இழைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    • கரும்பு தோட்டத்தில் தீ வைப்பதால் கிராம மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது அரியாக்குழந்தை புதூர் கிராமம். இங்குள்ள விவசாயி ஒருவர் அவரது கரும்பு தோட்டத்தில் சறுகுகள், காய்ந்த இழைகளை அடிக்கடி தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தீயினால் வெளியேறும் கரும்புகை அந்த பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயி தொடர்ந்து அவரது கரும்பு தோட்டத்தில் தீ வைப்பதால் கிராம மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார்.
    • தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார். இவரைப் போலவே அருகில் உள்ள விவசாயிகள் பலரும் கரும்பு பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவின் கரும்புஇன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அவரது கரும்பு வயலை அப்பகுதியை சேர்ந்தசிலர் முன்விரோதம் காரணமாக தீ வைத்ததாக கருப்பையா தெரிவித்து வருகிறார்.  தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது.

                                                                                                           மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டார் மற்றும் போர்வெல்லும் சேர்ந்து தீயில் சேதம் ஆனது. இதனால்   20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில் இதுகுறித்து கரும்பு வயலைஅதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது தீயில் எரிந்த கரும்புவிற்கு அதிகாரிகள் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதி அளித்து கரும்புவைஎடுத்துக் கொண்டு முழு விலை தர வேண்டும் எனவும் கருப்பையா தெரிவித்துள்ளார். 

    • அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளது.

    இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் நேற்று முன்தினம் மலையில் தீவைத்துள்ளனர்.

    இதனால் காய்ந்த மஞ்சம்புற்கள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி, மலை முழுவதும் பரவியது.

    இதில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகி சாம்பலானது. மர்ம நபர்கள் தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. மலைக்கு தீ வைக்கும் மர்ம நபர் களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
    • வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது.

    விழுப்புரம்::

    விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச்செனறார்   நள்ளிரவு சமயத்தில் வீட்டின் முன்னால் இருந்து புகை மண்டலமாக வந்தது. திடுக்கிட்டு எழுந்த வேலு வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். மேலும் இது குறித்து வேலு கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு சென்றுஸ்கூட்டர் எப்படி எரிந்தது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கமுத்து (வயது 55). இவர் பூசாரிபாளையம் அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
    • இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 55). இவர் பூசாரிபாளையம் அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலையில், இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அங்கமுத்து மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அங்கமுத்து மற்றும் அருகில் இருந்தவர்கள் சேர்ந்து, தீயை அணைத்தனர். இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கமுத்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? முன்விரோதம் காரணமா? கொடுக்கல் வாங்கல் தகராறா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க பிரமுகரின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே சங்கரன்பேட்டை சிவராந்தகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது26). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில்விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீபிடித்து எரிந்தது. மோட்டார் சைக்கிளை கந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விக்னேசின் தந்தை கென்னடி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
    • மூன்று வீடுகள், கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது போலீஸ் ஜீப்பின் முன்பக்ககண்ணாடி உடைக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் மூன்று வீடுகள், கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜீப்பின் முன்பக்ககண்ணாடி உடைக்க ப்பட்டதுகபிஸ்த லம் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் படுகாயமடைந்தார். தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீ ந்திரன், பாபநாசம் துணைக் காவல்கண்காணிப்பாளர் பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார்கள் குவிக்கப்பட்டு இரவு முழுவதும் ராஜகிரி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ராஜகிரி மெயின் ரோட்டில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ராஜகிரி பகுதி பதட்டமான சூழ்நிலையால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துபாப நாசம் காவல் ஆய்வா ளர் அழகம்மாள் வழக்கு ப்பதிவு செய்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

    ×