என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் முன் நின்ற ஸ்கூட்டருக்கு தீவைப்பு
- நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
- வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது.
விழுப்புரம்::
விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச்செனறார் நள்ளிரவு சமயத்தில் வீட்டின் முன்னால் இருந்து புகை மண்டலமாக வந்தது. திடுக்கிட்டு எழுந்த வேலு வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது இவரது ஸ்கூட்டர் தீப்பிடித்து தெரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். மேலும் இது குறித்து வேலு கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு சென்றுஸ்கூட்டர் எப்படி எரிந்தது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






