search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrests"

    • சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    • இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). பிரபல ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்–செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

    • 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்
    • வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் அடகு கடை கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதனை வினோத் நடத்திவருகிறார். கடந்த 10-ந் தேதி இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் வளையல்கள் என பொய் சொல்லி 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார் பின்னர் வினோத் அதனை மாற்றி அருகில் உள்ள வங்கியில் அடகு வைக்க முயன்றபோது அது போலி நகை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அதே பெண்மணி மீண்டும் வேறுஒரு போலி நகையை வைக்க மீண்டும் அதே அடகு கடைக்கு வந்தார். அப்போது அந்த நகையை சோதித்த பார்த்த போது அது போலி நகை என தெரியவந்தது. உடனே உரிமையாளர் வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த பெண்ணுடன் மேலும் 2பேர் வந்து உள்ளனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் சத்யா(வயது38)சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுபின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பெண்ணுடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பண்ருட்டியில் சீட்டு பண மோசடி செய்த ரேசன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாக்கியம் என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை யை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த சீட்டு நிறுவனத்தில் ஏராள மான பெண்கள் உள்பட பலர் பணம் கட்டி வந்தனர். இதற்கிடையில் சீட்டு நிறு வனம் நடத்தி வந்த மாரிமுத்து கொரோனாவுக்கு பலியானர். இதனால் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த இவரது மனைவி, மாமனார், ஆகியோரிடம் சீட்டுகட்டியவர்கள் பணம் கேட்டுவந்தனர். இதற்கிடையில் திருவதிகை சக்கரபாணி நகரில் உள்ள மாரிமுத்துவின் மாமனார் பழனியின் வீட்டுக்கு திருவதிகை ஓறையூரான் சந்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி பாக்கியம் (57) என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர். பழனி, பாக்கியத்தை ஆபாசமாக திட்டிகொலைமிரட்டல்விடுத்துள்ளார். இது பற்றி பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பழனியை கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • சின்ன சேலத்தில் ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரதிஷ் (22) என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ராகேஷ் (20) என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதியான தீபாவளி அன்று பட்டாசு வாங்குவதற்காக ரதிஷும், ராகேஷும் சின்னசேலம் பேரூராட்சி எதிரே நின்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த கனி என்கின்ற கனியழகன் (20) என்கின்ற விஜயபுரத்தை சேர்ந்த ஆனந்த் (20) என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்பு இரு தரப்பி னரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    பின்னர் இரு தரப்பினரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதை மனதில் வைத்துக் கொண்டு மதியம் ஒரு மணிக்கு ரதிஷ் வீட்டிற்கு நேரடியாக கனியும் ஆனந்தும் சென்றதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் படுத்திருந்த ராகேஷ் என்பவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சண்டையை விளக்க வந்த ரதிஷையும் தாக்க முயன்று ள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உயிருக்கு பயந்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ரதிஷ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து நேற்று கனி மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (40) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதைபார்த்த தயாளன் எதற்காக எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்தனர்.
    • இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழக சட்டசபை கூட்டத்தில் பேச அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்காததை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (19-ந் தேதி) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் கவிதா சசிகுமார், நகர செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் மருது பாண்டியன், ஜானகிராமன், பல்வேறு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், சரவணகுமார், ராமநாதபுரம் நகர துணைச்செயலாளர் ஆரிப் ராஜா உள்பட ஏராளமானோர் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசின் அடக்கு முறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கே.இராமதாஸ் தலைமையில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க. அரசை கண்டித்தும் சபாநாயகரை கண்டித்தும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் செய்தார். அவரை கைது செய்ததை கண்டித்து உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில்க ள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் இரா குமரகுரு தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் உளுந்தூ ர்பேட்டை ஒன்றிய செயலாளர் மணிராஜ், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை, திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செண்பக வேல் என 500க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கூடிய அதிமுகவினர் கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எல்.கே.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மிட்டாமண்டகப்பட்டு கூட்ரோட்டில் அ.தி.மு.க.வினர் க‌‌ண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.இராமதாஸ் தலைமையில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    செயலாளர் பாபு தலை மையில் அ.தி.மு.க. வினர் மறியல் செய்தனர். இதில் பேரவை மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், நகரத் தலைவர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் பாஷியம், குறிஞ்சிப்பாடி பேரூர்செய லாளர் ஆனந்த பாஸ்கர், உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். இவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

    • கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    வடலூர் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடந்த 17-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, படத்தை வடலூர்நகராட்சி அலுவலகத்தில் பொரு த்தப்பட்டது. அந்த படத்தை நகராட்சியில் கலெக்டர் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் அகற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ஜ.க.வினர்,வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பதட்டமான சூழல் உருவா னதால் போலீசார் பா.ஜ.க. வினரைதடுத்ததால், கோவி லானூர் மணிக ண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நகரத்தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர்கள் பெருமாள், கார்த்திகேயன், மூர்த்தி சிறப்பு அழைப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் தேவசரவணா சுந்தரம் ,விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் செல்வமணி ,ஓ பி சி அணி மாநில செயலாளர் அரங்கநாதன், இளைஞர் அணி மாநில செயலாளர் ரமேஷ், மகளிர் அணி மாநில செயலாளர் சுபஸ்ரீ தவபாலன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது வடலூர் போலீசார் பாஜக நிர்வாகிகள் 52 பேரை கைது செய்தனர். 

    • இலங்கை அகதிகள் முகாமில் 2 பேருக்கு பாட்டில் குத்து விழுந்தது.
    • இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ரூபன்(37). இவரது அண்ணன் மிஸ்ரோய்(42). ரூபன் மனைவி செல்வி. கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக 2 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இதனால் செல்வியின் சித்தப்பா மகன் தமிழ்ச்செல்வன் தன்னுடைய அக்காவை பிரிந்து வாழ்வதால் ரூபனிடம் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று ரூபன் இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வன் குடிபோதையில் தகராறு செய்து ரூபனை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார்.

    தடுக்க வந்த அண்ணன் மிஸ்ரோயையும் பாட்டிலால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே ஓடிவிட்டார். காயம் அடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    • கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டடார்.
    • றப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அ த ன்ப டி கலவரத்தின்போது வன்முறையில்ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் பொருட்களை எடுத்துச்சென்ற கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொட ர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சின்ன சேலம் தாலுக்கா வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 37) அக்கராபாளையத்தைச் சேர்ந்த மாயவன் (29) மற்றும் போலீஸ் பஸ்சுக்கு தீ வைத்து எரித்த மூங்கி ல்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருஞானம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×