சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது

சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com