search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைகலப்பு"

    • திம்மராஜ் குடிபோதையில் சக்திவேலின் உறவினர் பெண்ணுடன் போனில் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.
    • சக்திவேல் கண்டித்து திம்மராஜூடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காலிங்கவரம் அருகே பொன்னல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் சக்திவேல் (வயது 29).

    அதே பகுதியைச் சேர்ந்த திம்மராஜ் (26), செந்தில்குமார் (32) ஆகியோர் சக்திவேலின் நண்பர்கள் ஆவார்.

    சம்பவத்தன்று சக்திவேல், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மது குடித்தார்.

    அப்போது திம்மராஜ் குடிபோதையில் சக்திவேலின் உறவினர் பெண்ணுடன் போனில் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார். இதனை சக்திவேல் கண்டித்து திம்மராஜூடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த திம்மராஜ் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து சக்திவேலை தாக்கினார். இதனை தடுக்க வந்த செந்தில்குமாரையும் அவர் தாக்கினார். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் அலறி துடித்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சக்திவேல் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திம்மராஜை கைது செய்தனர்.

    • சின்ன சேலத்தில் ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரதிஷ் (22) என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ராகேஷ் (20) என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதியான தீபாவளி அன்று பட்டாசு வாங்குவதற்காக ரதிஷும், ராகேஷும் சின்னசேலம் பேரூராட்சி எதிரே நின்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த கனி என்கின்ற கனியழகன் (20) என்கின்ற விஜயபுரத்தை சேர்ந்த ஆனந்த் (20) என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்பு இரு தரப்பி னரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    பின்னர் இரு தரப்பினரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதை மனதில் வைத்துக் கொண்டு மதியம் ஒரு மணிக்கு ரதிஷ் வீட்டிற்கு நேரடியாக கனியும் ஆனந்தும் சென்றதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் படுத்திருந்த ராகேஷ் என்பவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சண்டையை விளக்க வந்த ரதிஷையும் தாக்க முயன்று ள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உயிருக்கு பயந்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ரதிஷ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து நேற்று கனி மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.
    • இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 38), ஆனந்தி, (32), குடும்பத்தினருக்கும், மணிகண்டன் (40), ராதா (35), முருகேசன் குடும்பத்தினருக்கும், நிலத்தில் உள்ள பாதை சம்பந்தமாக இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு ராதா தரப்புக்கு பாதை வேண்டாம் என்று சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதா நிலத்துக்கு முன் உள்ள பாதயை திருத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் நிலத்திற்கு முன்னால் உள்ள பாதையை திருத்தியதால் ராதா குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிலத்திற்கு செல்ல வழி இல்லாமல் திருத்துகிறாயே என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனால் இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள். இதனால் செந்தில், ஆனந்தி, மணிகண்டன், ராதா, ஆகியோர் காயம் அடைந்தார்கள். இதனால் இரு தரப்பினரும் கல்லால் அடித்துக் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக இரு தரப்பினரும் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

    ×