search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested"

    • இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக வாலிபர் சிக்கினார்
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அவன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து சுகுணாபுரம், சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ.110 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவர் இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வீடு காலி செய்யும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு
    • சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரம், காந்திநகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது53). இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் (37) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அவர் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனை ஜானகிராமன் கண்டித்தார். மேலும் அவரிடம் வீட்டை காலி செய்யும் படி கூறினார்.

    இந்த நிலையில் ஆனந்த் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தை பேசி தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஜானகிராமன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது21). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் 'வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கோகுலை கைது செய்தனர். அவர் சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோல் மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
    • புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.

    அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

    இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

    அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடை த்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது53) தொழிலாளி. இவரது மகன் வெங்கடகிருஷ்ணன் (24). கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடகிருஷ்ணன் தனது தந்தை ராமஜெயத்தை தட்டி கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் அங்கிருந்த கத்தியால் தனது மகன் வெங்கடகிருஷ்ணனை சரமாரியாக தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில்சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிராஜ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

    • 4 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்
    • சொந்த ஊரில் வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்றது அம்பலம்

     கோவை,

    கோவை கோவில்பாளையம் அண்ணாநகரில் உள்ள டீக்கடையில் கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து கோவில்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரவடிவேல் தலைமையிலான போலீசார் தகவல் வந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் பிஸ்வால் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லெட் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜேஷ் பிஸ்வால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு இருந்து வரும் போது 6 கிலோ கஞ்சா சாக்லெட்டை வாங்கி வந்தது வட மாநில தொழிலாளர்களுக்கு 2 கிலோ சாக்லெட்டை விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிஸ்வாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்து மஞ்சபுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் கட்ட சிலர் முடிவு செய்தனர். இதற்கான பணத்தை தயார் செய்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சிலருடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்தார். இதில் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (40) உட்பட 11 பேர் பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் பெரியசாமி இடம் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏழுமலை, சதீஷ்குமார் (24), கலியமூர்த்தி (28) ஆகியோர் மணிகண்டனை திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ஏழுமலை, சதீஷ்குமார், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெரிய சாமியை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
    • யாழினி பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அண்ணா குடி யிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகள் யாழினி (வயது 21). இவர் சம்பவத் தன்று ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    இந்த பேருந்து வேதாளை ஊராட்சி குஞ்சார்வலசை பஸ் நிறுத்தம் வந்த போது தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் டாரஸ் (19), சந்தியா மகன் கிர்லோஸ்கார் (20) ஆகியோர் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் யாழினி அருகில் நின்று கொண்டு அவரை ஆபாச மாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து யாழினி பலமுறை எச்சரித் தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து யாழினி தனது பெற்றோருக்கு செல் போனில் தகவல் கொடுத் தார். அவர்கள் இதுகுறித்து மண்டபம் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து டாரஸ், கிர்லோஸ் கார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பூசாரிபட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அருணாச்சலம் (31). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
    • சம்பவதன்று அதிகாலை பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பூசாரிபட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அருணாச்சலம் (31). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். சம்பவதன்று அதிகாலை பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சந்தேக அடிப்படையில் கே.மோரூர் சவுல்பட்டி கொட்டாய் பகுதியை சேர்ந்த சேட்டு (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் பூசாரிபட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்து.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    காப்பர் வயர்களை திருடிய ெதாழிலாளி உள்பட 5பேர் கைது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தி த்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள், காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ. 2 லட்ச த்துக்கும் மேற்பட்டகாப்பர் வயர்கள், காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து டிஎன்பிஎல் காகித ஆலை விற்பனை அலுவலர் (கழிவு பொருட்கள்) அமரன் வேலா யுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் கந்தசா மிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (வயது31). , பசுபதி நகர் பகுதிகளைச் சேர்ந்த கோபி (30), செம்மடை பகுதியை சேர்ந்த பூபதி(28), புகளூர் சுந்தராம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (29). கந்தசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (40) ஆகிய 5 பேரும் சேர்ந்து காகித ஆலைக்குள் இறங்கி காப்பர் வயர்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிம ன்றத்தில் ஆஜ ர்படுத்தப்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    • கோவர்தன் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார்.
    • உடனடியாக துடியலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

     கோவை.

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (38), இவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.

    குழந்தைகள் பட்டாசு வைப்பதை பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த கோவர்தன் மற்றும் மதி என இருவரும் குழந்தைகள் பட்டாசு வைத்த இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள்.

    இதனால் செல்வகுமார் இரண்டு பேரிடமும் கேள்வி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் கோவர்தன் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார். மேலும் வீட்டிற்கு முன்புறம் உள்ள கூரையை உடைத்தனர்.

    மதியின் நண்பர்கள் நந்தகுமார் லோகேஷ் என இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரிடம தகராறில் ஈடுபட்டனர், அப்போது தடுக்கவந்த தவமணி என்ற பெண்ணின் ஆடையை கிழித்தனர்.

    இது குறித்து உடனடியாக துடியலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து நந்தகுமார், லோகேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×