பரனூர் சுங்கச்சாவடி அருகே மோட்டார்சைக்கிளில் 'வீலிங்' சாகசம் செய்த வாலிபர் கைது

புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான கோகுல்.
கைதான கோகுல்.
Published on

செங்கல்பட்டு:

சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது21). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் 'வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கோகுலை கைது செய்தனர். அவர் சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோல் மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com