search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested"

    ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு கோபால் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(55). இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு நஞ்சப்பா ரோட்டில் உள்ளது.

    நஞ்சப்பா ரோட்டில் உள்ள வீட்டை லாவண்யா என்பவர் மாதத்தில் 2 முறை சென்று சுத்தம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று லாவண்யா வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உடனே லாவண்யா ராஜேஷ்வரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இது குறித்து ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி(22), வால்பாறையை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(31), கேரளா மலப்புரத்தை சேர்ந்த பூக்கயா(47), கோவை தடாகம் ரோடு வெங்கிடாபுரத்தை சேர்ந்த முருகன்(63) ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோட்டூர் போலீசார் விசாரணை

    கோவை, 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு தேவராயபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    அப்போது மாணவியை சந்தித்த சிறுவன் திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி அவரை சென்றாம்பா ளையம் அம்மன் நகரில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டு தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சிறுவனுடன் சென்றாம்பா ளையத்தில் உள்ள தோட்ட த்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோட்டூர் போலீசார் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • மனைவியை அபகரித்து குடித்தனம் நடத்தியதால் ஆத்திரம்
    • 2 அரிவாள் மற்றும் கார் பறிமுதல்

    கோவை, 

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த வர் ஷெல்டன் (வயது 29). கூலித் தொழி லாளி. சந்தை பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). பெயிண்டர். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்ப ர்கள்.

    அடிதடி வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கார்த்திகேயன் ஜெயிலுக்கு சென்றார். அப்போது ஷெல்டனுக்கும் கார்த்திகேயனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    பின்னர் ஷெல்டன் கார்த்திகேயனின் மனைவி மற்றும் 2 பெண் குழந்தை களுடன் சரவணம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். தன்னு டைய மனைவியுடன் ஷெல்டன் குடும்பம் நடத்தி வருவதால் அவர் மீது கார்த்திகேயனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதன் கார ணமாக 2 பேரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஷெல்டன் அடிதடி வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு அவரது தம்பி நியூட்டனுடன் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கார்த்திகேயன் ஒரு காரில் நண்பர்களான விளாங்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (40), ஆவாரம்பா ளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி (32), கணபதியை சேர்ந்த பிரதாப் (29) ஆகியோருடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயு தங்களுடன் பின் தொ டர்ந்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் புதுப்பாளையம் சீதாவனம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் மோதி கீழே தள்ளினர். இதில் கீழே விழுந்த ஷெல்டனை வெட்டி கொலை செய்ய முயன்றார். அப்போது கும்பலிடம் இருந்து தப்பிய அவர் இதுகுறித்து தொ ண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஜெகன், சத்தியமூர்த்தி, பிரதாப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 2 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • பொது மக்களை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.
    • வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை போலீசார் ஜெயமூர்த்தி ராஜாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொது மக்களை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதலியார் பேட்டை கருமார வீதியை சேர்ந்த அசோக் குமார் வயது 22 என்பது தெரியவந்தது.

    வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை சுடுகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வேலாயுதம்பா ளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமை யிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை சுடுகா டு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் சேவல் சட்டையில் பணம் கட்டி சூதாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது .

    அதன் அடிப்படை யில் அவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தி னர். அப்போது சேவல் சண்டை சூதாட்ட த்தில் ஈடுபட்ட வர்கள் புன்னம் சத்திரம் அருகே பாண்டி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தெய்வே ந்திரன் (வயது 40), கரூர் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் (26) ,கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கவிய ரசன் (26),

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசார் காட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (26),கரூர் வேலுச்சாமி புரம் பகுதி யைச் சேர்ந்த கண்ணன் ( 32 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது . 5 பேரையும் கைது செய்து சேவல் சண்டையில் ஈடுபட்ட சேவ ல்களை பறி முதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக வாலிபர் சிக்கினார்
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அவன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து சுகுணாபுரம், சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ.110 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவர் இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வீடு காலி செய்யும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு
    • சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரம், காந்திநகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது53). இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் (37) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அவர் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனை ஜானகிராமன் கண்டித்தார். மேலும் அவரிடம் வீட்டை காலி செய்யும் படி கூறினார்.

    இந்த நிலையில் ஆனந்த் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தை பேசி தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஜானகிராமன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது21). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் 'வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கோகுலை கைது செய்தனர். அவர் சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோல் மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
    • புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.

    அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

    இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

    அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடை த்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது53) தொழிலாளி. இவரது மகன் வெங்கடகிருஷ்ணன் (24). கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடகிருஷ்ணன் தனது தந்தை ராமஜெயத்தை தட்டி கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் அங்கிருந்த கத்தியால் தனது மகன் வெங்கடகிருஷ்ணனை சரமாரியாக தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில்சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிராஜ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

    • 4 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்
    • சொந்த ஊரில் வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்றது அம்பலம்

     கோவை,

    கோவை கோவில்பாளையம் அண்ணாநகரில் உள்ள டீக்கடையில் கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து கோவில்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரவடிவேல் தலைமையிலான போலீசார் தகவல் வந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் பிஸ்வால் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லெட் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜேஷ் பிஸ்வால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு இருந்து வரும் போது 6 கிலோ கஞ்சா சாக்லெட்டை வாங்கி வந்தது வட மாநில தொழிலாளர்களுக்கு 2 கிலோ சாக்லெட்டை விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிஸ்வாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×