என் மலர்

  நீங்கள் தேடியது "3 PERSONS"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்தையடுத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
  • போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(வயது 45), சேகர்(55). இவர்கள் அதே பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்தையடுத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

  இதே போல் வட்டமலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(45) அதே பகுதியில் குட்கா விற்பதாக தகவல் கிடைத்தது. குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாதை தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

  அரியலூர்:

  அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வாத்திக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சேப்பெருமாள். விவசாயி. இவரது மகன்கள் முருகேசன், செல்வராசு. இவர்கள் இருவருக்கும் பாதை பிரச்சினை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசனை செல்வராசு, அவரது மகன் ரஜினி மற்றும் உறவினர் சங்கர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி, உளுந்து பறிமுதல் செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சிவகங்கை

  தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தேவைக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

  இதனை பிற இடங்களில் கூடுதலாக விற்பனை செய்வதற்காக அல்லது தேவைக்காக கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

  அதன் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழச்செவல்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கிட்டங்கியில் அரசின் குடிமைப் பொருட்களான அரிசி 50 கிலோ சிப்பமாக 73 மூட்டைகளும், 40 கிலோ சிப்பமாக 6 மூட்டை உளுந்து என 3 ஆயிரத்து 890 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

  அப்போது, மேற்கண்ட குடிமைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குேடானில் பணியாற்றிய சுப்பிரமணியன், சுரேஷ்குமார், கிட்டங்கி உரிமையாளார் மாரிமுத்து ஆகியோர் மீது குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வரதட்சணை புகாரில் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்

  திருச்சி :

  திருச்சி மாவட்டம், மட்டப்பாறைபட்டி பகுதியை சேர்ந்தவர் மீனா குமாரி (வயது25). இவர் திருச்சி மாநகரம் கேகே நகர் சுப்ரமணியன் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

  இந்தநிலையில் மீனாகுமாரி இடம் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி கூடுதல் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கணவர் சதீஷ்குமார், மாமனார் சின்னசாமி, மாமியார் மணிமொழி ஆகிய 3 பேர் மீது கன்டோன்மென்ட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  ×