

திருச்சி :
திருச்சி மாவட்டம், மட்டப்பாறைபட்டி பகுதியை சேர்ந்தவர் மீனா குமாரி (வயது25). இவர் திருச்சி மாநகரம் கேகே நகர் சுப்ரமணியன் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் மீனாகுமாரி இடம் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி கூடுதல் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கணவர் சதீஷ்குமார், மாமனார் சின்னசாமி, மாமியார் மணிமொழி ஆகிய 3 பேர் மீது கன்டோன்மென்ட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.