search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appointment"

    • இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை மாண வர்கள் நலன் கருதி தற்காலி கமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் படி சிவகங்கை மாவட்டம் மல்லல் ஆதிதிரா விடர் நல தொடக்கப்பள்ளி யில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-1, உஞ்சனை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-2 மற்றும் அதிகரம் உயர்நிலைப்பள்ளி யில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்-2 (ஆங்கிலம்-1,அறிவியல்-1) என மொத்தம் 5 பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளது.

    மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையி லும் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்க ளுக்கான ஊதியம் இடை நிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியி டத்திற்கான கல்வித்தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடை முறையில் உள்ள விதிமுறை களை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார் வளர்களாக இருப்பவர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி யிடத்திற்கு பட்டியலி னத்தவருக்கும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்க ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

    இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பணிக்கு தெரிவு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 வரை மட்டுமே ஆகும். விண்ணப் பிக்க விரும்புவோர் சிவ கங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப் பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் வருகிற 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
    • 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்
    • பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாத கோவில்களுக்கு உறுப்பினர்களை நியமித்து விரைவில் நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான் திருக்கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து குடமுழுக்கு நடைபெறாத திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத திருக்கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில்களை நல்ல முறையில் பராமரித்து கோவில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கே வரக்கூடிய பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

    கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உரிய முறையில் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு அந்த கோவில்களிடம் ஒப்படைத்து அந்த கோவில்களுக்கு கூடுதலாக நிதிகளை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோவில் நல்ல முறையில் பராமரித்து செயல்பட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெய தேவி, அண்ணக்கொடி,திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், காங்கேயம் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.
    • ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்

    திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.தற்போது அவர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

    அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்
    • ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர்

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வர்த்தகர் பிரிவு மாநில தலைவரும் எம்.பி.யுமான விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவின் மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை சோனியா காந்தி இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி அமைந்திட அனைவரும் மாநிலத் துணைத் தலைவர் ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும்
    • மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர்.

     தாராபுரம்,ஆக.8-

    அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபிஸ்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் செயலாளர் டாக்டர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:- அதிகரித்து வரும் சர்க்கரை நோயின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அறிகுறிகள் தெரிந்த, நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தவோ, பாதிப்பை குறைக்கவோ முடியும்.

    பக்கவாத பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க, அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லாதது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதனால் கிராமப்புறத்தினர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உடல் ஊனத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை அளிக்க ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

    பிசியோதெரபிஸ்ட்டுகளும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர். இந்நிலை நீடித்தால், தமிழகத்தில் பக்கவாதத்தால், உடல் ஊனம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக, பிசியோதெரபிஸ்டுகளை நியமிக்க வேண்டும். பயிற்சி பிசியோதெரபிஸ்டுகளை ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும்.

    பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 161-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3237 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர், தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறைத்துறை பயிற்சி முடித்துள்ள 7 துணை தாசில்தார்களுக்கு பணியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
    • கும்பகோணம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை, சிறைத்துறை பயிற்சி முடிந்து வரும் துணை தாசில்தார்களுக்கு பணியிடம் வழங்கியும், நிர்வாக நலன் கருதி பொது மாறுதல் வழங்கியும் கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி மாறுதல் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

    சிறைத்துறை பயிற்சி முடித்துள்ள 7 துணை தாசில்தார்களுக்கு பணியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பயிற்சி முடித்துள்ள துணை தாசில்தார் சீனிவாசன், தஞ்சை பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக தனித்துணை கலெக்டர் (வருவாய் நீதிமன்ற) அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணைதாசில்தார் மீனா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பா ளராகவும், துணைதாசில்தார் பிரான்சிஸ் ஒரத்தநாடு வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், துணைதாசில்தார் மதியழகன், கும்பகோணம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    துணைதாசில்தார் சுரேஷ், பாபநாசம் வட்ட அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்ப ட்டுள்ளார்.

    துணைதாசில்தார் பைரோஜாபேகம், மாவட்ட கலெக்டர் அலுவலக எல்.ஆர்.பிரிவு தலைமை உதவியாளராகவும், துணைதாசில்தார் சரவணன், ஒரத்தநாடு வட்ட அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பேராவூரணி வட்ட அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் தமயந்தி, பாபநாசம் வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தா ராகவும், திருவிடைமருதூர் வட்ட அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருவிடைமருதூர் வட்ட அலுவலராக தணை தாசில்தாராக (தேர்தல்), திருவிடைமருதூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் ராஜ்குமாருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ண குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக சிதம்பர பாரதி (ஆவியூர்), சேகர் (குரண்டி), ஜெகன் (செங்குன்றாபுரம்), அய்யனார் (அதிவீரன் பட்டி), கார்த்திகேயன் (விருதுநகர்), திலீபன் மஞ்சுநாத் (சிவகாசி ரிசர்வ் லைன்).

    தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளராக தனுஷ் எம்.குமார் எம்.பி. நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக தங்கம் ரவி கண்ணன் (ஸ்ரீவில்லி புத்தூர்), பாபு (அருப்புக் கோட்டை), பாசறை ஆனந்த் (ராஜபாளையம்), கார்த்திக் (ராஜபாளையம்), கே.கார்த்திக் (வெம்பக்கோட்டை).மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் தெற்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக களப்பணிக்கு செல்வின் பிரபாகரன், சமூக வலைதள பிரிவுக்கு புகழேந்தி, மகளிர் பிரிவுக்கு ஜெயலலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, அருப்புக் கோட்டை நகரத்திற்கு விஜயராஜா, காட்வின் தன்மா, பவித்ரா ஆகியோ ரும், அருப்புக் கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கு அன்புராஜ், சரவணகுமார், சிந்துஜா, வடக்கு ஒன்றியத்திற்கு பிரவீன், பெரிய கருப்பசாமி, முருகேஸ்வரி, சாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு சோலைமுத்து, பிரவீன்குமார், வைஜெயந்தி, விருதுநகர் கிழக்கு ஒன்றியத்திற்கு கார்த்திக், மணிகண்டன், பானுப்பிரியா, ராஜபாளையம் தொகுதிக்கு பிரபாகரன், சதீஷ், லட்சுமி லக்ஷனா, ராஜபாளையம் நகரம் வடக்கு ஒன்றியத்துக்கு பிரபாகரன், முத்துராஜ், யோக சித்ரா, ராஜபாளையம் நகரம் தெற்கு ஒன்றியத்துக்கு பாலன், மருது பாண்டியன், கவிதா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு லிங்கேஸ்வரன், ரூபன் மிசி ஷெல்டன், கற்புக்கரசி, ராஜபாளையம் செட்டியார் பட்டி பேரூராட்சிக்கு சாமுவேல் சகாயம், லெனின், விஜயலட்சுமி, சேத்தூர் பேரூராட்சிக்கு ஜெயசூர்யா, ராஜதுரை, சின்னதாய் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சாத்தூர் தொகுதிக்கு வீர சுப்பிரமணியன், ராகேஷ், செல்வி, சாத்தூர் நகரத்திற்கு முனீஸ்வரன், வினோத், பொன் செல்வி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு வெங்க டேசன், கருப்பசாமி, திவ்யா, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு கணேசன், ரங்கராஜ், ராஜ லட்சுமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு மருதுராஜ், முரளி, தமிழரசி, ராஜபா ளையம் கிழக்கு ஒன்றியத்துக்கு முத்துக்கு மாரசாமி, புதியராஜ் ஸ்டாலின், சந்தான சுந்தரி, சாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு ஹரிஹரன்.

    மதன்குமார், மகேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு செந்தில்குமார், ஆனந்தகுமார், கலைஞர் சுதந்திர ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்திற்கு அஜ்மல் கான், விக்னேஸ்வ ரன், காளீஸ்வரி, ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியத்துக்கு தன்ராஜ், சுந்தர்ராஜன், சீதாலட்சுமி, வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு வள்ளிநாயகம், வீர அழகு, இந்துஜா, மம்சாபுரம் பேரூராட்சிக்கு வல்லரசு, மாரிசெல்வம், சந்தான புஷ்பம், வ.புதுப்பட்டி பகுதிக்கு சஞ்சய் குமார், வில்லா ராஜா, விஜய லட்சுமி, வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு வீரக்குமார், விஜய பிரகாஷ், பஞ்சு, எஸ்.கொடிக்குளம் பகுதிக்கு மனோ சுந்தர், சாதிக் அலி, மகாலட்சுமி, சுந்தரபாண்டியம் பகுதிக்கு விக்னேஷ், நாகராஜ், முத்துலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.
    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக கோமதி என்பவர் இருந்து வந்தார். சமீபத்தில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வர்களின் பற்களை உடைத்ததாக எழுந்த புகாரையடுத்து போலீசார் இடமாற்றம் செய்ய ப்பட்டனர்.

    அதில் இன்ஸ்பெக்டர் கோமதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் மாவட்ட உளவுத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கியூ பிரிவில் பணியாற்றி யவர். திண்டுக்கல்லில் பணியாற்றி வந்த இவர் தற்போது மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மதுரை மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
    • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 27 -ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புகார் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை 93804 14023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ombudsperson.mdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    ×