search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hoc basis"

    • இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை மாண வர்கள் நலன் கருதி தற்காலி கமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் படி சிவகங்கை மாவட்டம் மல்லல் ஆதிதிரா விடர் நல தொடக்கப்பள்ளி யில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-1, உஞ்சனை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-2 மற்றும் அதிகரம் உயர்நிலைப்பள்ளி யில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்-2 (ஆங்கிலம்-1,அறிவியல்-1) என மொத்தம் 5 பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளது.

    மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையி லும் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்க ளுக்கான ஊதியம் இடை நிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியி டத்திற்கான கல்வித்தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடை முறையில் உள்ள விதிமுறை களை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார் வளர்களாக இருப்பவர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி யிடத்திற்கு பட்டியலி னத்தவருக்கும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்க ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

    இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பணிக்கு தெரிவு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 வரை மட்டுமே ஆகும். விண்ணப் பிக்க விரும்புவோர் சிவ கங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப் பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் வருகிற 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    ×