என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை
- வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
- 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 161-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3237 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
முகாமில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர், தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






