search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appointed"

    காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவராக நீரஜ் குந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை இன்றிரவு அறிவித்துள்ளது. #NeerajKundan #NSUIPresident

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்கங்களின் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

    கேரளா மாநில மாணவர் சங்கம் மற்றும் மேற்கு வங்காளம் மாநில மாணவர் சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கடந்த 9-4-1971 அன்று இந்திய தேசிய மாணவர் சங்கத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கி இருந்தார்.



    இதேபோல், பா.ஜ.க.தரப்பில் ஏ.பி.வி.பி. (ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பு) இயங்கி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராக நீரஜ் குந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை இன்றிரவு அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் காந்தி பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NeerajKundan #NSUIPresident
    மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். #ArvindSaxena #UPSC #Chairman
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டு மே 8-ந்தேதி யு.பி.எஸ்.சி.யின் உறுப்பினராக இணைந்த அரவிந்த் சக்சேனா, கடந்த ஜூன் 20-ந்தேதி முதல் யு.பி.எஸ்.சி.யின் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். தற்போது இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி வரை அந்த பதவியில் இருப்பார்.

    டெல்லி என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த சக்சேனா பின்னர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முடித்தார். 1978-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கேபினட் செயலாளராக இவர் பணியை தொடங்கினார். காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளில் இவர் திறம்பட செயல்பட்டவர் ஆவார். #ArvindSaxena #UPSC #Chairman
    சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. #Pugalendhi #ChennaiHighCourt #ChiefJustice
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், 59 நீதிபதிகள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வரும் பி.புகழேந்தியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு வயது 51. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மேல ஆமாத்தூர் ஆகும். தற்போது, மதுரை நாராயணபுரம் விஸ்வசாந்தி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது தந்தை பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வருவாய்துறையில் பணியாற்றி தாசில்தாராக பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்று விட்டார்.

    இதன் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை விருத்தாசலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகழேந்தி படித்தார். இவரது தாயார் பெயர் வேலம்மாள். மனைவி பெயர் ஜெயபாரதி. இவர், மதுரையில் உள்ள கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

    புகழேந்தி, 1990-ம் ஆண்டு புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டில் வக்கீலாக பதிவு செய்த அவர், 1993-ம் ஆண்டு வரை கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனது சித்தப்பா பரமசிவத்திடம் ஜூனியராக இருந்தார்.

    அதன்பின்னர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற ராஜேஸ்வரனிடம் ஜூனியராக சேர்ந்து பணியாற்றினார்.

    சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரி, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி ஆகியவற்றின் வக்கீலாக பணியாற்றி உள்ளார். மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்க (எம்.பி.எச்.ஏ.ஏ.) செயலாளராக இருந்துள்ளார். பல்வேறு முக்கிய கிரிமினல் வழக்குகளிலும், ரிட் மற்றும் வங்கி தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி வாதாடி உள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிறப்பு அரசு வக்கீலாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் தமிழக அரசுக்காக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார். 2.8.2016 முதல் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் விரைவில் பதவியேற்க உள்ளார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.  #Pugalendhi #ChennaiHighCourt #ChiefJustice
    சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். #LubnaAlOlayan
    ஜெட்டா:

    சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி 17.2 பில்லியன் அமெரிக்க டாலர் (12,560 கோடி) மதிப்புடன் நாட்டின் மிகப்பெரிய 3-வது வங்கியாக உருவெடுத்துள்ளது.

    இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியாவின் பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொதுவாக பழமை வாதத்தை காலம் காலமாக கடை பிடித்து வரும் சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட்டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

    புதிய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.

    தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில் குழுமத்துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். #LubnaAlOlayan
    இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக சத்தீஷ் ரெட்டி இன்று நியமனம் செய்யப்பட்டார். #DRDO #DRDOchairman
    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.

    இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த எஸ்.கிறிஸ்டோபர் என்பவரது பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து, பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளை கவனித்து வந்தார்.

    இந்நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவியல் ஆலோசகர் சத்தீஷ் ரெட்டி இந்த பணியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இரண்டாண்டுகள் இந்த பதவியை வகிக்கும் சத்தீஷ் ரெட்டி, இந்நிறுவனத்தில் செயலாளராகவும் இருப்பார் என அரசு வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DRDO #DRDOchairman
    மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரித்தது. அப்போது துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டனர். #HighCourt
    பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் மத்திய விழிப்புணர்வு ஆணையராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #ExNIAchief #SharadKumar #CVCcommissioner
    புதுடெல்லி:

    ஊழல் தடுப்பு பிரிவின் பரிந்துரையின் உருவாக்கப்பட்ட மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கு தேசிய அளவில் மத்திய விழிப்புணர்வு ஆணையராக ஒருவரும், மேலும் இரு ஆணையர்களும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய விழிப்புணர்வு ஆணையர் பதவி கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் அந்த இடத்தில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி,எஸ். அதிகாரியான சரத்குமார் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவராக சுமார் நான்காண்டு காலம் பணியாற்றியுள்ளார். தற்போது 62 வயதாகும் இவர் வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்திய விழிப்புணர்வு ஆணையராக நீடிப்பார். #ExNIAchief  #SharadKumar  #CVCcommissioner
    தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமாரை நியமித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார்.

    வேலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக புலவர் ரமேசும், திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு கிருஷ்ணணும், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உதயம் எஸ்.ரமேசும், மதுரை மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.எஸ். சரவணனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே. முகிலனுக்கு அம்மா பேரவை தென்சென்னை வடக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    அவர் ஏற்கனவே வகித்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இதேபோல் அம்மா பேரவையின் தென் சென்னை தெற்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்புக்கு ஜெயவர்த்தன் எம்.பி. நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ம.தி.மு.க. ஆபத்து உதவிகள் அணியின் புதிய தலைவராக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க.வின் ஆபத்து உதவிகள் அணியின் செயலாளராக இருந்து வந்த கோ.கலையரசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் தொடர்ந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளராக நீடிப்பார்.

    ஆபத்து உதவிகள் அணியின் புதிய தலைவராக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் நியமிக்கப்படுகிறார். இவர் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புடன், கூடுதலாக இந்த பொறுப்பையும் கவனித்துக்கொள்வார். ஆபத்து உதவிகள் அணியின் செயலாளராக மதுரை, கே.புதூர், கற்பக நகரை சேர்ந்த எஸ்.முனியசாமி நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் கூடுதல் டாக்டர்களை தமிழக அரசு நியமிக்கவேண்டும் என பா.ம.க. இளைஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்க கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடந்தது. பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பாலு ஆகியோர் வரவேற்றனர். பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் சரவணராஜூ, மாவட்ட தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர் வடிவேலன், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல் ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில், ராசிபுரம் நகரத்தில் நடந்துவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ராசிபுரம் நகரத்தில் 500 மீட்டருக்கும் அப்பால் மதுபான கடைகளை வைக்காமல் கடை எண்கள் 5961, 5964 ஆகிய 2 கடைகளும் 500 மீட்டருக்கு உட்பட்டு உள்ளது. எனவே இந்த 2 மதுபான கடைகளையும் அப்புறப்படுத்தாவிட்டால் நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போதுமான டாக்டர்களை தமிழக அரசு நியமிக்கவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து ராசிபுரம் உழவர்சந்தைக்கு வெளியில், புதிய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள் அதிகளவில் உள்ளன. இதனால் உழவர்சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவரும் பொருட்கள் சரியாக விற்பனை ஆவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உழவர் சந்தைக்கு வெளியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வெளிவியாபாரிகளின் ஆதிக்கம், தலையீடு உழவர்சந்தையில் அதிகமாக உள்ளது. எனவே வெளிவியாபாரிகளின் ஆதிக்கத்தை குறைத்து பொதுமக்கள் பயன்பெரும் வகையில் உழவர் சந்தையின் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிசாமி, தலைமை பேச்சாளர் லோகநாதன், ராசிபுரம் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குணசேகரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×