search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti"

    ஆண்டிப்பட்டி அருகே போதையில் தாயை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வெங்கடசாமி மனைவி பாப்பம்மாள் (வயது90). இவரது மகன் செல்வம் (50). குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடித்து விட்டு மனைவியிடம் டார்ச்சர் செய்துள்ளார்.

    இதனால் அவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதனால் செல்வம் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். பாப்பம்மாள் தனது 2-வது மகன் வீட்டிற்கு சென்று அழுது புலம்பி உள்ளார்.

    இதனால் செல்வத்தின் தம்பி அவரை கண்டித்தார். தன்னை பற்றி தம்பியிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த செல்வம் குடிபோதையில் தனது தாயை தரக்குறைவாக திட்டி தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு சிங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் வேலுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி மீனாட்சியையும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர். இது குறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    சிங்கராஜபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துக்குமார் வேலை வி‌ஷயமாக வருசநாடு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 மற்றும் கடிகாரத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் வழிப் பறியால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை குமணன் தொழுவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பார்த்திபனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால்குமணன் தொழுவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே அன்னை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் மனைவி நித்யா (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த நித்யா தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் பார்த்து தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிசிச்சை பலனின்றி நித்யா உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டியில் மணல் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவ்வப்போது அவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    இதனால் வைகையாற்று பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் நீர் ஆதாரம் குறைவதோடும், மண் வளம் சுரண்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது24) மற்றும் மீராரு (28) மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா (வயது 26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    முருகேசன் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சினை உருவானது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த நிவேதிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நிவேதிதாவின் சகோதரர் பாண்டித்துரை க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    கம்பம் நெல்குத்தி புளியமரம் தெருவைச் சேர்ந்தவர் பகவதி மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி கணவனை பயமுறுத்த தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார். இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    மதுரை அருகே பனையூரைச் சேர்ந்தவர் நிர்மல்குமார் மனைவி மகேஸ்வரி (வயது 27). இவர் தனது மாமனார் மற்றும் மாமியாருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்துக்காக 27 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் வந்துள்ளார்.

    மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி சென்ற மகேஸ்வரி பஸ்நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை பார்த்த போது நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அசந்த நேரத்தில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது நின்ற மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் நகை மாயமானது குறித்து திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த அமுதா (30), சஞ்சனா (32) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை இவர்கள் கொள்ளையடித்தனரா? இவர்களுக்கு பின்பு கொள்ளை கும்பல் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ஜீவராணி (வயது 34). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜீவராணிக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜீவராணி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஜீவராணிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகா தேவி என்ற பெண் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒரு பெண் பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    ஆண்டிப்பட்டி அருகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்க வணங்காமுடி. இவர் புதிய மருத்துவ கல்வி தகுதியின்றி தனியார் ஆஸ்பத்திரியில் அலோபதி மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலை நிலை கல்வி மூலம் பி.ஏ.எம்.ஸ் படித்த தங்க வணங்காமுடி மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித தகுதியும் இல்லாதவர்.

    ஆனால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர்.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க தமிழ்செல்வன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். #AMMKProtest #ThangaTamilSelvan
    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிமுக அரசைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு அதிமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்க தமிழ்செல்வன், கட்சியினருடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.



    போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதிலும் மறியலை கைவிட தங்க தமிழ்செல்வன் மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #AMMKProtest #ThangaTamilSelvan
    ஆண்டிப்பட்டி அருகே மோர்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சேர்மலை (வயது56). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை பூக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சம்பவத்தன்று கடமலைக்குண்டு அருகே 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர்.

    அப்போது அதனை பார்த்த சேர்மலை அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தன்னுடையதுபோல தெரிந்தது. இருப்பினும் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த நம்பர் பிளேட் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    சந்தேகத்தின்பேரில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இது குறித்து சேர்மலை கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் விசாரணை நடத்தி போலீசார் பாலூத்து மற்றும் தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாதேஸ் (வயது16), தங்கபாண்டி (16) ஆகி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (வயது19). என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சரியாக செல்லாததால் அவரை தந்தை செல்வராஜ் கண்டித்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் சந்தோசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் செல்வராஜ் தனது மகன் சந்தோசை கல்லூரியில் இருந்து நிறுத்தி விட்டு கோவைக்கு வேலைக்கு அனுப்பி விட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சந்தோஷ் தனது ஊருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஆனந்தராஜ் குடிபோதையில் சந்தோசை பிளேடு கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தினார்.

    படுகாயம் அடைந்த சந்தோஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு தேவராஜன் நகரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி அபிராமி(வயது29). இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் அபிராமி கோவித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று குமரேசன் மற்றும் நாகராஜ் ஆகியோர் அபிராமியிடம் சென்று தகராறு செய்தனர். மேலும் அவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்கினர். இதை தடுக்கவந்த அபிராமியின் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து குமரேசன் மற்றும் அவரது நண்பர் நாகராஜை கைது செய்தனர்.

    ×